கர்ப்பிணிகள்… அழகு சாதனப் பொருட்கள்… அச்சச்சோ! 

beauty products during pregnancy
Why not use beauty products during pregnancy?
Published on

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இச்சமயத்தில் உணவு, உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது போலவே, அழகு சாதனப் பொருட்கள் பயன்பாட்டிலும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. சமூக அழுத்தம், தனிப்பட்ட விருப்பங்கள் காரணமாக பல பெண்கள் கர்ப்ப காலத்திலும் அழகாக இருக்க விரும்புகின்றனர்.‌ ஆனால், அனைத்து அழகு சாதனப் பொருட்களும் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? என்பது தெரியவில்லை. இதன் உண்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

அழகு சாதனப் பொருட்களில் உள்ள பொருட்கள்: அழகு சாதனப் பொருட்கள் பல வகையான வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சில பொருட்கள் சருமத்தை ஊடுருவி ரத்த ஓட்டத்தில் கலக்கக்கூடும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சருமம் மிகவும் உணர்ந்திறன் கொண்டதாக மாறும். இதனால், சில வேதிப்பொருட்கள் சருமத்தில் அரிப்பு, சிவப்பு, வீக்கம் போன்ற அலர்ஜிக் எதிர்வினைகளை ஏற்படுத்தலாம்.

சில அழகு சாதனப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள், கருவுக்குள் சென்று குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்ற ஆய்வுகள் உள்ளன. உதாரணமாக, ரெட்டினால், சால்சிலிக் அமிலம் போன்ற பொருட்கள் கருவுக்குள் சென்று குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். மேலும், சில வாசனை திரவியங்கள், டை போன்ற பொருட்கள் தோல் ஒவமை, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். 

எச்சரிக்கை: கர்ப்ப காலத்தில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், கருவுக்குள் வளரும் குழந்தை மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கும். சில பொருட்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதித்து, பிறவி குறைபாடுகளை உண்டாக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே, ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது. 

இதையும் படியுங்கள்:
அல்சரை குணப்படுத்தும் இயற்கை வழிமுறை சிகிச்சைகள்!
beauty products during pregnancy

என்ன பயன்படுத்தலாம்? 

இயற்கையான பொருட்களைக் கொண்ட, அதிக இரசாயனம் இல்லாத மிதமான சோப்புகளைப் பயன்படுத்தலாம். எண்ணெய் அதிகம் இல்லாத மாய்ஸசரைஸர் பயன்படுத்துவது நல்லது. SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட சன் ஸ்கிரீனை எப்போதும் பயன்படுத்துங்கள். மேக்கப் போடுவதற்கு மினரல் சேர்க்கப்பட்ட பொருட்கள் பொதுவாக பாதுகாப்பானவை. 

நீங்கள் கர்ப்ப காலத்தில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது. மருத்துவர் உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப சரியான ஆலோசனையை வழங்குவார்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com