‘கிளென்சர்’ எதற்குப் பயன்படுத்த வேண்டும்... முழுமையாகத் தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Benefits of cleanser
Benefits of cleanserImage Credits: Vibrant Skin Bar
Published on

ம்முடைய தினசரி வாழ்க்கையில் சருமப் பராமரிப்பில் ‘கிளென்சிங்’ என்பது மிகவும் முக்கியமானதாகும். நம்முடைய சருமத்தின் மீது எண்ணெய், அழுக்கு போன்றவை படிந்திருக்கும். இதை தண்ணீர் மட்டுமே வைத்து கழுவுவதால் சரியாக போவதில்லை. அதற்காக தான் கிளென்சர் பயன்படுத்துகிறோம். அதை பற்றிய விவரங்களை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இப்படி கிளென்சிங் பயன்படுத்துவதால் நம் சருமத்தில் இயற்கையாகவே உருவாகும் எண்ணெய்களும் சேர்த்து நீக்கப்படுகிறது. இதனால் Skin barrier பாதிக்கப்பட்டு சரும எரிச்சல், சரும வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனால் நம்முடைய சருமத்திற்கு ஏற்ற கிளென்சரை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது.

கிளென்சர் என்பதில் சர்பேக்டன்ஸ் (Surfactants) அதிகம் உள்ளது. ஒரு சர்பேக்டன்ஸ்ஸில் தலை ஒன்று வால் ஒன்று இருக்கும். தலைப்பகுதி தண்ணீரை விரும்பக்கூடியது. வால்பகுதி எண்ணையை விரும்பக்கூடியது. நம்முடைய சருமத்தில் நிறைய எண்ணெய் மற்றும் அழுக்குப்படிந்து இருக்கும். அப்போது தண்ணீர் மற்றும் ஊற்றி கழுவும் போது சருமத்தில் படிந்திருக்கும் எண்ணெய் போகாது. அங்கே தான் நாம் சோப் பயன்படுத்துகிறோம்.

சோப்பில் நிறைய சர்பேக்டன்ஸ் உள்ளது. ஏற்கனவே சொன்னது போல இதில் உள்ள எண்ணெய் விரும்பும் பகுதி சருமத்தில் உள்ள எண்ணெய்யில் போய் ஒட்டிக் கொள்ளும். நாம் அதை தண்ணீரை வைத்து கழுவும்போது தண்ணீரை விரும்பும் பகுதி தண்ணீரில் அழுக்கையும் சேர்த்து கொண்டு வந்து விடும்.

இந்த சர்பேக்டன்ஸ்ஸில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நம்முடைய சருமத்தில் உள்ள தேவையான எண்ணெய் எது? தேவையில்லாத எண்ணெய்? எது என்பது தெரியாது. நம்முடைய சருமத்தில் லிப்பிட்ஸ் அதாவது கொழுப்பு லேயராக அமைக்கப்பட்டிருக்கும். நாம் ஒவ்வொரு முறை கிளென்சிங் செய்யும் போதும் இது பாதிக்கப்படும். அதனால் ஒரு கிளென்சரில் மென்மையான சர்பேக்டன்ஸ் பயன்படுத்தியிருக்கிறார்களா? என்று தெரிந்து கொள்வது அவசியம். Synthetic surfactants and natural plant derived surfactants இரண்டுமே இருக்கிறது. Synthetic surfactantsல் கொஞ்சம் கடுமையான சர்பேக்டன்ஸ்கள் இருக்கிறது. இதுவே Plant derived surfactants ல் மென்மையானது உள்ளது.

சர்பேக்டஸ்ஸில் தலைப்பகுதி, வால்பகுதி இருக்கிறது என்று பார்த்தோமில்லையா? அதில் தலைப்பகுதியில் என்ன சார்ஜ் உள்ளது என்பதை பொருத்து நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது. தலைப்பகுதி பாசிட்டிவாக இருந்தால் ஏனையானிக்(Anionic), தலைப்பகுதி நெகட்டிவாக இருந்தால் கேட்டயானிக்(Cationic), எந்த ஒரு சார்ஜூமே இல்லையென்றால் Non-ironic, பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டு சார்ஜ்களுமேயிருந்தால் அதை Amphoteric என்று சொல்லுவோம்.

இதையும் படியுங்கள்:
'மாய்ஸ்சரைசர்' பற்றி முழுமையான தகவல்களை தெரிஞ்சிக்கலாம் வாங்க!
Benefits of cleanser

Non- ironic ஆக இருக்கும் சர்பேக்டன்ஸ் எல்லாமே மென்மையாக இருக்கும். Coco-glucoside, decyl-glucoside, Lauryl- glucoside போன்றவை Non-ironic சர்பேக்டன்ஸ் ஆகும். SLS என்றால், sodium lauryl sulphate தற்போது நிறைய கிளென்சரில் சல்பேட் ப்ரீ என்று வருவதை பார்த்திருப்பீர்கள். SLS நல்ல கிளென்சர்தான். எனினும் முகத்தில் இருக்கும் எல்லா எண்ணெய்களையும் சேர்த்து நீக்கிவிடுவதால் இந்த கெமிக்கலை ஒதுக்கி வைத்துவிட்டு சல்ப்பேட் ப்ரீ என்று விளம்பரம் செய்கிறார்கள்.

என்னதான் நல்ல கிளென்சராக இருந்தாலும் அது சருமத்தில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தவே கூடும். அதை சரிசெய்து சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க Glycerine, hylarounic acid சேர்த்து கொள்வது நல்லது. அதனால் சருமத்தை கிளென்ஸ் பண்ணிவிட்டு வந்து 3 நிமிடத்தில் மாய்ஸ்டரைசர் போடுவது சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com