ஆளி விதை: உங்கள் சருமத்திற்கான அற்புத மருந்து!

beauty tips in tamil
wonder drug for the skin
Published on

ளி விதை சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு என்பதை நாம் அனைவருமே அறிவோம். எடை குறைப்பதற்கு, சக்கரை வியாதி, புற்றுநோய் ஆகியவை குணமாவதற்கு என்று பல வகைகளில் பயன்படுகிறது.

இன்று நாம் பார்க்க போவது ஆளி விதையில் பேஸ் பேக் செய்வது எப்படி என்பதைதான். ஆளி விதை எப்படி உடலுக்கு நன்மை பயக்கிறதோ அதே போலத்தான் கூந்தலுக்கும் சருமத்திற்கும் மினுமினுப்பை கூட்டுகிறது.

 ஆளி விதை பேஸ் மாஸ்க்:

முதலில் அடுப்பில் ஒரு தம்பள் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும். அதில்  2 ஸ்பூன் அளவிலான ஆளி விதையை போடவும். 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். இப்போது அது நன்றாக கொதித்ததும் இறக்கி வடி கட்டவும். சூடாக இருக்கும் அந்த கலவையை ஆற விடவும். இப்போது பேஸ்பேக் ரெடி. நன்றாக ஜெல் போல வந்திருக்கும் இந்த கலவையை முகத்தில் பூசிக் கொள்ளலாம்.

ஆளி விதையில் ஒமேகா 3 பேட்டி ஏசிட்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட், லிக்னன்ஸ் ஆகியவை இருக்கிறது.

இது முகத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது.

புற ஊதா கதிரிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. கொலாஜென் உருவாவதற்கு உதவுகிறது.

முகத்தில் இருக்கும் எண்ணை பசையை நீக்கி பி.ஹெச் லெவலையும் கட்டுப்படுத்துகிறது.

முகப்பொலிவையும் பளபளப்பையும் அதிகப் படுத்துகிறது. ஆளி விதையை சீரம், மாய்ஸ்டரைஸர், மாஸ்காக செய்தும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
கம்பீரம் தரும் வேட்டி: சில வியக்க வைக்கும் தகவல்கள்!
beauty tips in tamil

பருக்கள் நீங்க, ஆளி விதையை இரவு ஊர வைத்துவிட்டு அடுத்த நாள்  காலை நன்றாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து கொள்ளவும். அதில் தேன், சிறிதளவு எழுமிச்சை சாறு விடவும். இதை முகத்தில் தடவுவதால் முகப்பரு குறையும்.

சருமத்தை டீடாக்ஸிபை செய்ய, அரைத்து வைத்திருக்கும் ஆளி விதையில் சிறிது முல்தானி மட்டி மற்றும் தேனை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவவும்.

வழவழப்பான சருமத்திற்கு, ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதை ஜெல் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக அரைத்த ஓட்ஸ் பவுடரை கலந்து முகத்தில் தடவினால் வழவழப்பான சருமத்தை பெறலாம்.

சருமத்தை எக்ஸ்பாலியேட் செய்ய, ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதை ஜெல், துருவிய தேங்காய் சிறிதளவு, தயிர் சிறிதளவு, இலவங்கப்பட்டை பொடி சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இப்போது இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி விடவும்.

ஆளி விதை ஹேர் மாஸ்க்:

ரு டேபிள் ஸ்பூன் ஆளி விதை பவுடருக்கு அரை டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து கொள்ளவும். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து தலை முடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிக்கவும். இதனால் தலை முடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறுவதை காணலாம்.

-நான்சி மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com