
காஃபியில் ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. இதில் உள்ள கேஃபின் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. காலை காஃபி உங்களுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சிக்கும் உதவுவது பற்றித் தெரியுமா?
முடி வளர்ச்சிக்கு காஃபி எப்படி உதவுகிறது?
காஃபியில் உள்ளது கேபின் தலைக்கு நல்ல ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. அதிக அளவு ஆக்சிஜன் தருவதால் வேர்க்கால்களை வலுவாக்கி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
இதன் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் உங்கள் தலைமுடி ஃப்ரீ ராடிகல்களின் அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் செய்கிறது. முடி பிளவைத் தடுத்து வலுவாக்குகிறது.
உச்சந்தலை ஆரோக்கியம் :
காஃபி உச்சந்தலையில் இறந்த செல்களை எக்ஸ்ஃபோலியேட் செய்து, முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துகிறது.
மேலும் காஃபி முடி மெலிவை ஏற்படுத்தும் டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனைத் தடுக்கிறது.
காஃபி முடியை பளபளப்பாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது.
எப்படி உபயோகிப்பது?
காஃபி உச்சந்தலை மசாஜ்:
இரண்டிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் காஃபி பொடியில் டிகாக்ஷன் தயாரிக்கவும். இது ஆறியதும் அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து தலையில் மசாஜ் செய்யவும். சர்குலர் மோஷனில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கூந்தலை கழுவவும். பிறகு mild ஷாம்பு போட்டு அலசவும்.
காஃபி அலசல்:
ஒரு கப் நன்கு ஆறிய காஃபி டிகாக்ஷன் எடுத்துக் கொள்ளவும். தலையை ஷாம்பூ போட்டு அலசியபின் இந்த டிகாக்ஷனை தலையில் எல்லா இடங்களிலும் படும்படியாக தடவுங்கள். இதை 25 நிமிடங்கள் வைத்தபிறகு அலசலாம். இது முடிக்கு பளபளப்பு தருவதோடு அதை வலுவாக்கும்.
காஃபி மற்றும் தேன் முடி மாஸ்க்:
இரண்டு டேபிள் ஸ்பூன் காஃபி பொடியில் டிகாக்ஷன் தயாரிக்கவும். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து தலை முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் அலசவும். தேன் ஈரப்பதத்தைத் தரும். காஃபி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
காஃபி ஆலோவேரா:
இரண்டு டேபிள்ஸ்பூன் காஃபி பொடியில் டிகாக்ஷன் தயார் செய்து ஆறியதும் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்துக் கலந்து தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசவும். கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்பு இருப்பதால் தலை முடி அரிப்பைத் போக்கி முடியை நல்ல நீரேற்றத்துடன் வைக்கும். முடி வளர்ச்சியும் அபாரமாக இருக்கும்.