பெண்களுக்கு மட்டும் என்னதான் தங்கள் பீரோ முழுவதும் துணிகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தாலும், வெளியிலே கிளம்பும்போது போட்டுக்கொள்ள துணியே இல்லை என்று தோன்றும். இதுவே, ஆண்களை பாருங்கள் எங்கே போனாலும், தங்களிடம் இருக்கும் நான்கு டிரஸையே மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு கவலையே இல்லாமல் சென்று விடுவார்கள். என்ன நான் சொல்வது சரிதானே? இந்த பிரச்னைக்கான தீர்வு என்ன? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதில் காண்போம்.
1.நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அவர்கள் முன்பு ஸ்டேடஸ் காட்ட வேண்டும்? என்பது போன்ற Society Pressure ல் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு உங்களுடைய Personal styleல் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு எந்த ஸ்டைல் சரியாக இருக்கும், எந்த ஸ்டைல் ஒத்துப்போகும் என்பதை பற்றி முழுகவனம் செலுத்துவது சிறந்தது.
2.எந்த உடை அணிந்தாலும் அதில் Comfort மிகவும் முக்கியமாகும். புதிதாக வாங்கி அணிய வேண்டும் என்று நம்முடைய வசதிக்கு ஏற்ற மாதிரி உடையணியாமல் இருப்பது அசௌகர்யத்தை ஏற்படுத்தும்.
3.நம்மிடம் இருக்கும் உடைகளை Mix match செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு உடையுடைய துப்பட்டாவை வேறு குர்த்தியுடனும், வெல்வேறு பேன்ட் மற்றும் சர்ட்களை மாற்றி மாற்றி வெவ்வேறு காம்பினேஷனில் அணிய கற்றுக்கொள்ள வேண்டும். இது உங்களிடம் நிறைய உடைகள் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும். எந்த நிறத்திற்கு எது மேட்ச் ஆகும் என்ற சந்தேகம் இருந்தால், கலர் வீல் மூலமாக தேர்வு செய்து அணியலாம்.
4. நீங்கள் ஒவ்வொரு முறை ஒவ்வொரு உடை அணியும் போதும் அதற்காக போடும் Accessories, Makeup மற்றும் Hairstyle ஐ விதவிதமாக போடும்போது அது உங்களும் அழகாகவும், தனித்துவமாகவும் காட்டும். அதை வைத்து உங்களை நீங்கள் தனித்துவமாக காட்டலாம்.
5. நிறைய துணிகளை வாங்கி குவிப்பதனால் Fabric wastage அதிகமாக ஏற்படுகிறது. நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்க இதுபோன்ற Wastage செய்வதை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த டிப்ஸையெல்லாம் ட்ரை பண்ணி பெண்கள் அழகாகவும், தனித்துவமாகவும் ஜொலியுங்கள்.