முகச்சுருக்கம் என்பது முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மேல் தான் வரும். அப்போதும் கூட அவர்களுடைய வயதிற்கும் முகசுருக்கத்திற்கும் சம்பந்தம் இல்லாத அளவிற்கு தான் இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினர்களுக்கு கூட இந்த முகச்சுருக்கங்கள் வந்து சிறிய வயதிலேயே முதியவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது .
இவ்வாறு இளம் வயதில் முகச்சுருக்கும் ஏற்படுவதை சரி செய்வதற்கான எளிய வழியைதான் இந்த அழகு குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
முகச்சுருக்கங்களை நீக்கி முகம் இளமையாக மாற பலாக்கொட்டை ஃபேஸ் பேக் நல்ல ரிசல்ட் தருகிறது இதற்கு பலாக்கொட்டைகளை சுத்தம் செய்து காய வைத்து அதை தூள் செய்து பவுடராக்கி எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு சிறிய பவுலில் இரண்டு ஸ்பூன் பலாக்கொட்டையுடன் அதை கலக்க காய்ச்சாத பசும்பால் அல்லது பால் ஆடை இரண்டில் ஏதேனும் ஒன்றை கலந்து நன்றாக பேஸ்ட் போல குழைத்து முகத்தில் பேக் போல் போட வேண்டும்.
இந்தப் பலாக்கொட்டை ஃபேஸ் பேக் முப்பது நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே இருக்க வேண்டும். 30 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவேண்டும். அதிகமாக முகச்சுருக்கம் வந்தவர்கள் இந்த பேக்கை மூன்று மாதங்கள் தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை போட்டுவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நிச்சயம் மறந்து விடும். ஒரு வேளை இப்பொழுது தான் முகச்சுருக்கம் வர ஆரம்பிக்கிறது என்றாலோ அல்லது முகச்சுருக்கம் வருவதை தள்ளி போட வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த பேக்கை போட்டால் போதும்.