கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டிய 5 வகையான ப்ராக்கள்!

Bras
Bras
Published on

இப்போது பெண்கள் விதவிதமான ஆடைகள் உடுத்துகிறார்கள். அந்தவகையில் அனைத்து ஆடைகளுக்கும் இந்த 5 வகையான ப்ராக்கள் இருந்தாலே போதும்.

முன்பெல்லாம் பெண்கள் புடவை மட்டுமே அணிவார்கள். ஆகையால் அதற்கேற்றவாரு ஒரே ப்ரா மாடல் இருந்தது. இதன்பின் சுடிதார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குமே அதே ப்ராவைதான் பயன்படுத்தினார்கள். காலம் போக போக இப்போது பார்த்தால், டீ ஷர்ட், ஷர்ட், மேக்ஸி, லெஹங்கா என்று எக்கச்சக்க ஆடைகள் வந்துவிட்டன. ஒரு உடைக்குப் போடும் ப்ரா மற்றொரு உடைக்கு பொருந்துவது இல்லை. இதனால், பெரும் அவதிதான் ஏற்படுகிறது. அந்தவகையில் எந்தெந்த உடைக்கு எந்த மாதிரியான ப்ரா அணியலாம் என்று ஒரு 5 ப்ராக்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1.  Full Coverage Bra: இந்த ப்ராவை நீங்கள் எந்த உடைக்கு வேண்டுமென்றாலும் அணியலாம். இது அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

2.  T-shirt Bra: பொதுவாக டி ஷர்ட் அணியும்போது ப்ரா ஷேப் தனியாக தெரிவது போல் உணர்வீர்கள். அந்த பிரச்னை இல்லாமல், டி ஷர்ட்காகவே வடிவமைத்ததுபோல் அழகாக தெரியும் ஒன்றுதான் டி ஷர்ட் ப்ரா.

3.  Plunge Bra: V Shape உடைகளுக்கும், முன்பகுதி சற்று கீழ் இறங்கி இருக்கும் ஆடைகளுக்கு இந்த ப்ராவைப் பயன்படுத்தலாம்.  

4.  Push-up Bra: இது சிலருக்கே பிடிக்கும் ப்ரா. மார்பகத்தை சற்றி தனித்துக் காண்பிக்கும் இந்த ப்ராவை மேக்ஸி போன்ற ஆடைகளுக்குப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு உடல் ரோமங்கள் நீங்க இயற்கை வழிமுறைகள்!
Bras

5.  Wired Bra: இந்த ப்ரா உங்கள் மார்பின் அமைப்பை சீராக காண்பிக்கும். இதனையும் நீங்கள் அனைத்து விதமான ஆடைகளுக்கும் பயன்படுத்தலாம்.

இந்த ஐந்து வகையான ப்ராக்களை எப்போதும் வைத்திருக்கவும். நாம் அணியும் உடை நேர்த்தியாக தெரிய வேண்டுமென்றால், உள்ளாடை சரியாக அணிய வேண்டும். நேர்த்தியாக மட்டுமின்றி அழகாகவும் தெரிய வேண்டுமென்றால் இந்த ப்ராக்களைப் பயன்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com