இயற்கை பொருட்களில் இவ்வளவு அழகு கிடைக்குமா?

இயற்கை பொருட்களில் இவ்வளவு அழகு கிடைக்குமா?

இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் மிக சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும்

எப்படி தெரியுமா? இதை படியுங்களேன்...!

கருவளையம் நீங்க:

கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கரு வளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விதையை பொடிசெய்து, அதில் தயிர் சேர்த்து பசைப் போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.

கருப்பு திட்டுகளை நீக்க:

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்புதிட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்தமுறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள மங்கு மறைந்துவிடும்.

நகத்தைப் பராமரிக்க:

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகி வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

இதழ்களை பராமரிக்க:

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித செயற்கை உதடு சாயமும் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும். உங்களுக்கு இயற்கையான சிவந்த இதழ்கள் கிடைக்கும்.

“பளிச் பளிச்” முகத்தைப் பெற:

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள்முகத்தை கழுவிப் பாருங்கள். உங்களுக்கு அமுல் பேபி போன்ற கொழுக் மொழுக் முகம் பெறலாம்

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையைமுகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

கழுத்தை பராமரிக்க:

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டுசொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ்செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

சருமத்தைப் பராமரிக்க:

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததை விட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்சியளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com