புருவத்தில் முடி வளர...!

புருவத்தில் முடி வளர...!

டல் சூடு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் சிலருக்கு புருவத்தில் முடி கொட்டி, பென்சிலால் புருவத்தை அழகுபடுத்தி இருப்பதைக் காணலாம். 

அவர்கள் இந்த எளிய வழிகளைப் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. சரி புருவம் போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தால் என்ன செய்யலாம். பலன் தரும் இந்த  குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள். 

திக்கான பாலை பஞ்சில் நனைத்து அதை புருவங்கள் மீது தடவவும். அது கால் மணி நேரம் ஊறிய பிறகு  வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்தால் புருவங்களில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் கேசின் ஆகிய இரண்டும் முடி வளர்ச்சியைத் தூண்டும் . 

வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். முடி வளர்ச்சியைத் தூண்டும். கூந்தலின் வேர்க்கால்களுக்கு இது பலம் அளிக்கும். இதனால் புருவங்கள் உதிராமல் இருக்கும்.

ரு துண்டு வெங்காயத்தை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது ஐந்து நிமிடங்கள் தேய்த்தால் புருவங்கள் அடர்த்தியாக வளரும். வெங்காய சாற்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள் புருவத்தில் தடவலாம். 

விளக்கெண்ணெயை விரலால் தொட்டு புருவங்களின் மீது தடவவும். அரை மணி நேரம் நன்கு ஊற விடவும். அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும். இப்படி தினமும் ஒரு முறை செய்து வந்தால் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும். 

லுமிச்சை பழத்தின் தோலை நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற விடவும். எண்ணெயில் இது ஒரு நாள் முழுவதும் நன்கு ஊறட்டும். பிறகு அந்த எண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொள்ளவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரின் கழுவி விடவும். . 

ற்றாழை ஜெல்லை இரண்டு புருவங்களின் மீதும் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் நன்கு ஊற விடவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும் இதை வாரம் மூன்று முறை செய்யலாம். கற்றாழையில் இருக்கும் 'அலோனின்' என்ற பொருள் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com