குழந்தைகள் தனி அறையில் தூங்கலாமா?

குழந்தைகள் தனி அறையில் தூங்கலாமா?

“பத்து வயசுதானே ஆறது. கூடவே படுக்க வெச்சா என்ன? ம் – கலிகாலம்!”

“குழந்தையைத் தனியறையிலா தூங்க வைக்கறா?”

“ஐயோ பாவம்! பயப்படாதோ!”

தனியறையில் தூங்க வைக்கப்படும் குழந்தைகளைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள், பரிதாபத்துடன் இவ்வாறு பேசுவது வழக்கம்.

ஆனால், உண்மையில் குழந்தைகள் வளர்ந்தபின்பு தனியறை தேவைதான்.

தாயின் கருப்பையிலிருந்து வெளிவரும் குழந்தை முதலில் தாயின் அருகாமையில்தான் இருக்கும். தாயின் வாசனை, தொடுதல் மூலமாக தாயை அறிந்து, அவளின் அணைப்பில் பாதுகாப்பாக உறங்குகிறது. அவளைச் சற்றே காணவில்லையெனில் அழுகிறது. சில குழந்தைகள் கட்டை விரலைச் சப்பியவாறோ, புறங்கையை நக்கியவாறோ தூங்கும். இதன்மூலம் தாய்ப்பாலை அருந்துவது போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் இரவு நேரம் தூங்குகையில், தங்களின் நடுவே குழந்தையைப் படுக்க வைத்துக்கொள்வதுண்டு. பாதுகாப்பு வளையத்தினுள் இருப்பதைப் போல குழந்தை உணரும்.

சில பெற்றோர்கள், கைக்கெட்டும் தூரத்தின் தொட்டிலிலோ அல்லது தனிப்படுக்கையிலோ படுக்கவைத்து, குழந்தை அழுகையில், “கண்ணுல்ல! செல்லமில்ல! அழக்கூடாது. நான் பக்கத்துலே இருக்கேன்! எனக் குரல் கொடுக்கையில், குழந்தை அதை அறிந்து சமாதானமாகிறது.

                     *****************************************

ற்றே வளர்ந்த, விபரம் தெரிந்த குழந்தைகளைத் தனியறையில் படுக்க வைக்கலாம். கூடவே வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. காரணம்?

வளர்ந்த குழந்தைகள் பெற்றோர்களுடன் படுக்கையில், அநேக விஷயங்களில் அம்மா – அப்பா கோண்டுவாக மாறி, அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கேட்டு, தங்களது சொந்த மூளையை உபயோகிக்கத் தவறுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது.

மன வளர்ச்சியும், முதிர்ச்சியும் பக்குவமும் வரவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், அவர்களைத் தனியாக படுக்க வைக்க பக்குவப் படுத்துவதோடு, இடையிடையே அவர்களைக் கண்காணிப்பதுவும் அவசியம்.

நல்லவை – கெட்டவைகளை அவ்வப்போது தெளிவாக, அதேநேரம் அன்புடன் விளக்குவது முக்கியம். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாமல், நண்பர்களை மாதிரியே அவர்களுடன் பழகினால், வளர்ந்த குழந்தைகள், பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

பெற்றோர்களும் தேவையான அறிவுரைகள் கூற நல்ல வாய்ப்பாக அமையும்.

அம்மா – அப்பா கோண்டுவாக குழந்தைகளை மாற்றிவிடாமல், சுயமாகச் சிந்தித்து செயல்பட, அவர்களை உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். எடுத்ததெற்கெல்லாம் தாங்கி விடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com