கர்ப்பிணிக்கு வளைகாப்பு வைபவம் ஏன்?

கர்ப்பிணிக்கு வளைகாப்பு வைபவம் ஏன்?

ஜோதிட சாஸ்திரத்தின்படி வளையல்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையவை. திருமணமான பெண்கள் வளையல் அணிய வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. கண்ணாடி முதல் தங்க வளையல்கள் வரை பெண் களுக்கு எல்லா வளையல்களும் பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால் வளையல் அணிவதின் நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஆரோக்கியம், ஜோதிடம் ரீதியாக வளையல்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்து வந்தால் பல அற்புதமான பலன்களை அனுபவிக்க முடியும்.

இந்து மத நம்பிக்கையின்படி, திருமணமான பெண்கள் வளையல் அணியாமல் இருந்தால் அது அபசகுனமாக சொல்லப்படுகிறது. வளையல் அணியாத பெண்கள் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கிறார்களாம். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவர்களது குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள் என்கிறது இந்து சாஸ்திரம். ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் தொடர்ந்து வளையல் அணியும்போது மொத்தக் குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையும் மேம்படும்.  

இரத்த ஓட்டம் மேம்படும் 

பெண்கள் வளையல்களை அணிவதால் மணிக்கட்டில் உராய்வு ஏற்படுகிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆகவே, உயர் இரத்த அழுத்தத்தின் வாய்ப்பும் குறைகிறது. 

கர்ப்பிணிகளுக்கு வளையல்  

ர்ப்பிணிகள் தங்களுடைய ஏழாவது மாதத்திற்குப் பிறகு கைகள் நிறைய வளையல் அணிகிறார்கள் அதற்கான காரணம், கருவில் வளரும் குழந்தைக்கு 7 மாதத்திற்கு பிறகே மூளை செல்கள் உருவாகும். அப்போதுதான் அந்த குழந்தை, பல்வேறு வகையான ஒலிகளை அடையாளம் காணத் தொடங்கும். தொடர்ந்து வளையல் சத்தம் கேட்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. தாயாகப் போகும் பெண்களுக்கு வளையல்கள் நன்மை பயக்கும். கர்ப்பிணியின் மன அழுத்தத்தை போக்கி மனதை சாந்தமாக்கும். இதனால் தான் கர்ப்பத்தின் 5 அல்லது 7வது மாதங்களில், சாஸ்திரம் என்ற பெயரில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. 

வளையல்களை அணியும் பெண்களுக்கு மற்ற பெண்களைவிட குறைந்த சோர்வு, உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை ஆய்வுகளும் கூறுகின்றன. வளையல்களின் நேர்மறை ஆற்றல் உடல்நலப் பிரச்னைகளைத் தடுப்பதாக நம்பப் படுகிறது. வளையல்கள் அணிவது இல்லற வாழ்க்கையை மேம்படுத்துகிறது. ஒரு பெண் வளையல் அணிவதால் தம்பதிகளுக்கு இடையேயான உறவு மேம்படுகிறது. கணவனுடன் நெருக்கம் அதிகம் ஆகிறது. 

வலது கையில் வளையல்கள் அணிவது அலங்காரம் மட்டுமில்லை, ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. உங்களுடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் கட்டாயம் வளையல் அணிய வேண்டும். இது அந்த கிரகத்தை வலுப்படுத்த உதவும். நீங்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ இது உதவுகிறது.

கண்ணாடி வளையல்களின் நன்மைகள் 

பெண்களுக்கு நேர்மறை ஆற்றலை அளிக்கின்றன. கண்ணாடி வளையல்கள் சுற்றுப்புறத்திலிருந்து நேர்மறை ஆற்றலை உறிஞ்சி எதிர்மறை ஆற்றலை நீக்க உதவுகின்றன. கண்ணாடி வளையல்களின் சத்தம் பெண்களின் மனநிலையை அமைதியாக வைக்கும். கண்ணாடி வளையல்களில் விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அணியக்கூடாது. உடனடியாக கைகளிலிருந்து அகற்றிவிட வேண்டும். ஏனென்றால் உடைந்த வளையல்களில் சாத்வீக-சைதன்ய சக்திகள் செயலற்று போகும்.

வளையல்களின் நிறம் 

ச்சை நிற வளையல்கள் அணிவது சிறப்பானது. இந்நிறத்தில் அணிவதால் மன நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும். சிவப்பு நிற வளையல் தீய சக்திகளை விரட்ட வல்லது. காப்பு சக்திகளை அதிகம் கிரகிக்கக்கூடிய ஆற்றல் இந்நிறத்திற்கு உண்டு.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com