சிலர் காலில் கறுப்பு கயிறு கட்டிகொள்வது ஏன் தெரியுமா..?

சிலர் காலில் கறுப்பு கயிறு கட்டிகொள்வது ஏன் தெரியுமா..?

பலர் கறுப்பு நிறத்தை துக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடை அணிய மாட்டார்கள்.

ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதால் ஆபத்தா? எனக்கேட்டால் கிடையவே கிடையாது. அவ்வாறு கட்டி கொள்வதால் நம்மை சுற்றும் தீய சக்திகள் நெருங்காது. அதேபோல் செய்வினை சூனியங்கள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. அது மட்டுமின்றி சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது.

கறுப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம். இதனை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும்.

கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் நாம் விழுந்தாலும் மிகப் பெரிய ஆபத்து நேராமல் பாதுகாக்கும். நீண்ட கால தீராத நோய் இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும். இதனை கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம்.

எதிர்மறை ஆற்றலில் தாக்குதல் குறையும். பருவமடைந்த ஆரம்பத்தில் வெளியே செல்லும் பெண்களுக்கு இதனை கட்டி விடுவது மிகப் சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com