மறந்தும்கூட வீட்டில் இந்த செடிகளை வைக்காதீங்க!

மறந்தும்கூட வீட்டில் இந்த செடிகளை வைக்காதீங்க!

நம் வீட்டை எப்பொழுதுமே வாஸ்து சாஸ்திர படி அமைத்திட நன்மைகள் பலவற்றைக் தரும். இவ்வாறு வாஸ்துப்படி அமைக்க நம் வாழ்க்கையில் சந்தோஷமும், செல்வமும் நிலைத்து நிற்கும் என்பது ஜதீகம்.

பொருட்களை உரிய இடத்தில் வைப்பதன் மூலம் வீட்டிற்கு நன்மை வந்து சேர்கிறது. தவறான திசை, எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை, தாவரங்களை வைக்க நெகடிவ் விளைவுகளை, எண்ணங்களையே தரும்.

அந்த வகையில் பெங் சுய் சாஸ்திரப்படி பார்த்தால் சில தாவரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலைத் தருவதாக நம்பப்படுகிறது.

முட்களையுடைய ரோஜா செடியைத்தவிர கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்கக் கூடாது.

சிவப்பு நிற மலர்களுடைய போன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்கக்கூடாது. தோட்டத்தில் பின்புறம் வைக்கலாம்.

புளிய மரம் மற்றும் மிர்ட்டில் செடி வகைகளில் கெட்ட சக்தி தங்கியிருக்கும். அதனால் அதை வீட்டில் வைப்பதோ, இந்த மரங்கள் உள்ள இடங்களில் வீடு கட்டுவதையோ தவிர்க்க வேண்டும்.

வாடும் செடிகள், அழுகிய‌ தாவரங்கள், இலைகள் உள்ள செடிகள் வீட்டில் இருப்பது துரதிர்ஷ்டமாகும். முட்களையுடைய மர‌வகைகள் மற்றும் பாபுல்மரம் போன்றவை எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.

இலவம் பஞ்சு மற்றும் பனைமரங்கள் வீட்டின் அருகே காணப்படுவதும் நல்லதல்ல. சிறிய மற்றும் பெரிய தொட்டிகளில் உள்ள தாவரங்களை வடக்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி வைக்கக்கூடாது.

வீட்டில் தொங்கவிடும் படியான தொட்டிச் செடிகள் வீட்டுக்கு நெகடிவ் எனர்ஜியை கொண்டு வந்து விடும் என்கிறது வாஸ்து.

பெரிய மரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டினுள் ஏற்படுத்தும். கிழக்கு திசை மரங்கள் வீட்டின் நல்ல ஆற்றலுக்கு இடையூராக இருப்பதாக சொல்கிறதுவாஸ்து.

பொதுவாகவே மணம் தரும் மலர் செடிகள், பசுமை நிறைந்த தாவரங்களையே நம் வீட்டிலும், நம்மை சுற்றிலும் வைத்து பராமரிக்க அவை நல்ல எனர்ஜியை, பாசிட்டிவ் உணர்வுகளைத் தந்து நம்மை மன மகிழ்வோடு வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com