1. துருவக் கரடிகள் உலகின் மிகப்பெரிய கரடி இனத்தைச் சேர்ந்த மற்றும் ஆர்க்டிக் துருவத்தின் சிறந்த வேட்டையாடும் விலங்கினங்கள். இவை வலிமை மற்றும் சகிப்புத்தன்மையின் சக்தி வாய்ந்த அடையாளமாகும்.
2. கடல் கரடி என்று பொருள்படும் இந்த கம்பீரமான கரடிகள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கடலில் அல்லது கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் செலவழிக்கின்றன.
3. இவை சிறந்த நீச்சல் வீரர்கள். இவற்றால் 350 கிலோ மீட்டர் வரை நீந்த முடியும். தங்கள் முன் பாதங்களால் துடுப்பு எடுத்து நீந்துவதன் மூலம் பின்னங்கால்களை சுக்கான் போல தட்டையாக வைத்திருக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஆறு மைல் வேகத்தை நீந்திக் கடக்கும் திறன் பெற்றவை. பல மணி நேரம் சீராக ஒரு பனிக்கட்டியிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல முடியும்.
4. இவற்றின் உடல், கொழுப்பின் அடர்த்தியான அடுக்குகளால் ஆனவை. குளிர்ந்த காற்று மற்றும் நீரிலிருந்து அவற்றை பாதுகாக்கும் அம்சத்துடன் கோட் போன்ற அமைப்புடன் உள்ளன. இவை வலுவான வாசனை உணர்வைக் கொண்டுள்ளன. தங்களது இரையை அவற்றின் வாசனையை வைத்து 32 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து இவற்றால் மோப்பம் பிடிக்க முடியும்.
5. துருவக் கரடிகள் 50 சதவிகிதம் நேரத்தை உணவுக்காக வேட்டையாடுவதில் செலவிடுகின்றன. என்றாலும், இவற்றின் வேட்டை தந்திரங்கள் அரிதாகவே வெற்றி பெறுகிறது. ஏனென்றால், இவற்றின் முக்கிய உணவாக இருப்பது சீல்கள் எனப்படும் கடல்வாழ் உயிரினங்கள் ஆகும். இவற்றைப் பிடிப்பதற்காக தண்ணீரின் ஓரத்தில் பொறுமையாக காத்திருக்கின்றன. மேலும், இவை ஆர்க்டிக் நரிகள், திமிங்கலங்கள், வால்ரஸ்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை உண்ணுகின்றன. சீல்களின் சடலங்கள் பிற பாலூட்டிகளுக்கு உணவாக அமைகின்றன.
6. தன்னுடைய அடர்த்தியான ரோமங்களுக்கு அடியில் துருவக் கரடிகள் கருப்பு நிற தோலைக் கொண்டுள்ளன. இவற்றின் ரோமம் ஒளி ஊடுருவக் கூடிய தன்மை வாய்ந்தது. அது காணக்கூடிய ஒளியை பிரதிபலிப்பதால் வெள்ளை நிறத்தில் தோன்றுகின்றன.
7. காலநிலை மாற்றம் துருவக் கரடிகள் உயிர் வாழ்வதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில் ஆர்டிக் கடலில் நடைபெறுவதால் இதனுடைய வாழ்விட அமைப்பின் சாத்தியமான அபாயங்கள் வருகின்றன. எண்ணெய் கசிவுகளுடன் தொடர்பு கொள்வதால் கரடியின் ரோமத்தில் இன்சுலேட்டிங் விளைவுகளை குறைக்கின்றன. மேலும் கடலில் கலக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் இவற்றுக்கு விஷமாக மாறக்கூடும்.
8. பருவ நிலை மாற்றத்தால் கடல் பனி உருகுவதால் துருவக் கரடிகள் கோடையில் உணவு தேடி வெளியே செல்லும்போது மனிதர்களுக்கும் கரடிகளுக்கும் மோதல்கள் அதிகமாகின்றன. இவை மக்களால் வேட்டையாடப்படுகின்றன.
9. ஆண் துருவக் கரடிகள் எண்ணூறு கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். பெண் கரடிகளை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும். இவை மூன்று மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இவை உலகின் மிகப்பெரிய கரடி இனமாகவும் உலகின் மிகப்பெரிய நில மாமிச உண்ணிகளாகவும் இருக்கின்றன.
10. இவை 42 ரேஸர் கூர்மையுடன் கூடிய பற்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பாதங்கள் 30 சென்டி மீட்டர் அகலம் உள்ளவை. இது ஒரு சாப்பாட்டு தட்டின் அளவு ஆகும். இந்த பாதங்களால் ஆழமான பனியில் மலையேற முடியும். இது ஒரு இயற்கையான ஸ்னோ ஷூக்கள் போல அமைந்துள்ளன. இதற்கு மூன்று இமைகள் உள்ளன. இவற்றின் நாக்கு நீல கலரில் இருக்கும்.
துருவக் கரடிகள் உண்மையிலேயே அசாதாரண விலங்குகள். அவை வாழும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள். அவற்றின் உயிர் வாழ்வு ஆர்க்டிக் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்துடன் சிக்கலானதாக பிணைக்கப்பட்டுள்ளது. இது வனவிலங்குகளில் காலநிலை மாற்றத்தின் பரந்த தாக்கங்களை எடுத்துக்காட்டுகிறது.