பூச்சிகளிடமிருந்து விதைகளைப் பாதுகாக்கும் 11 பாரம்பரிய முறைகள்!

Methods of protecting seeds from insects
Methods of protecting seeds from insects
Published on

மது முன்னோர்கள் பூச்சிகளால் விதைகளுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க தொன்றுதொட்டே பல நுட்பங்களைக் கடைபிடித்து வந்துள்ளனர். விதைகளை பூச்சிகளின் தாக்குதலிலிருந்து தடுக்கும் பாரம்பரிய முறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. வேப்ப இலை: நெல் பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் விதை சேமிப்பில் விதைகளுடன் வேப்ப இலைகளைக் கலந்து சணல் சாக்கில் கட்டி வைப்பதன் மூலம் பூச்சிகளை அண்ட விடாமல் தடுக்கலாம்.

2. வேப்ப விதை கரைசல்: விதைகளை குறுகிய கால விதை சேமிப்பிற்கு சணல் சாக்குகளை வேப்ப விதை கரைசலில் நனைத்து நிழலில் காயவைத்து அவற்றில் நெல், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் விதைகளை சேமித்தால் சாக்கிலிருந்து வரும் வாடைக்கு பூச்சிகள் நெருங்காது.

3. நாய்த்துளசி இலை: உளுந்து போன்ற பயறு வகை விதைகளை நாய்த்துளசி இலைகளுடன் கலந்து அதை சணல் சாக்கில் கட்டி சேமித்தால் பூச்சி தாக்குதலில் இருந்து 3 முதல் 6 மாதம் வரை பாதுகாக்கலாம்.

4. எள் விதை சேமிப்பு: எள் விதைகளை சேமிக்கும்போது ஒரு கிலோவுக்கு 10 கிராம் நெல்மணிகளை கலந்து சேமிப்பதால் எள் விதையை தாக்கும் இந்தியன் அந்துப்பூச்சி தாக்குதலைக் குறைக்கலாம். நெல்லின் கூர்மையான பகுதியானது அந்துப்பூச்சியின் புழுக்கள் கூண்டுப்புழு பருவம் அடைவதற்குத் தடையாக இருக்கும்.

5. தும்பை இலை: கேழ்வரகு விதையுடன் வேம்பு அல்லது தும்பை இலைகளை கலந்து வைப்பதால் ஓராண்டு வரை பூச்சி தாக்குதலைத் தடுக்கலாம்.

6. வசம்பு பவுடர்: வசம்பை பொடியாக்கி நெல், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் விதைகளுடன் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வசம்பு பொடி என்ற கணக்கில் கலந்து வைத்தால் ஓராண்டு காலம் வரை பூச்சிகள் அண்டாது.

7. புங்க இலை: புங்க இலைகளை நெல் விதை மூடைகளுக்கு இடை யில் வைப்பதன் மூலம் பூச்சிகள் வர விடாமல் தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உடல் பருமனை குறைக்கும் நீர் நடை!
Methods of protecting seeds from insects

8. செம்மண் கரைசல்: துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகை விதைகளை செம்மண் கலவையுடன் கலந்து காய வைத்த பின் சேமித்து வைத்தால் பூச்சிகள் அண்டாமல் ஒரு வருடம் வரை சேமிக்கலாம்.

9. விளக்கெண்ணெய்: பயறு வகை விதைகளில் விளக்கெண்ணெய் தடவி சேமித்தால் விதைகளை பூச்சிகள் அண்டாது.

10. சூடம் எல்லா வகையான விதை சேமிப்பின்போதும் 5 கிலோ விதைக்கு ஒரு சூடம் என்ற கணக்கில் சேர்த்து சணல் சாக்கில் சேமிப்பதால் அனைத்து வகையான பூச்சிகளையும் வராமல் தடுக்கலாம்.

11. மாட்டுச்சாணம்: பூசணி, பாகல், புடலை, சுரை, பீர்க்கு போன்ற விதைகளை ஈர சாணத்துடன் கலந்து வரட்டியாகத் தட்டி 2 அல்லது 3 நாட்கள் வெயிலில் காய வைத்து, பின்பு சேமித்து வைத்தால் ஓராண்டுக்கும் மேலாக பூச்சித் தாக்குதல் இன்றி சேமிக்கலாம்.

நன்றி: மகாலட்சுமி விதைப் பரிசோதனை மையம், மதுரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com