உலகில் வாழும் 4 விசித்திரமான உயிரினங்கள் தெரியுமா?

Peacock Spider
Peacock SpiderImage Credits: Science News
Published on

ம் உலகில் எண்ணற்ற வித்தியாசமான மற்றும் அழகான உயிரினங்கள் இருக்கின்றன. அதில் 4 வித்தியாசமான, கலர்ஃபுல்லான உயிரினங்களை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Peacock Spider: ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த வகையான சிலந்திகள் பார்ப்பதற்கு மிகவும் கலர்ஃபுல்லாக, ரொம்பவே அழகாக இருக்கும். ஆண் மயில்களை போலவே இந்த வகை ஆண் சிலந்திகள் அதனுடைய தோகை மாதிரியான அமைப்பை விரித்து பெண் சிலந்திகளை இனச்சேர்க்கைக்கு கூப்பிடுமாம். இந்த வகை சிலந்தி மிகவும் அரிய வகையாகும். இது மிகவும் சிறிய உயிரினம். இதன் அளவு 2.5 முதல் 5mm ஆகும். ஒவ்வொரு சிலந்தியின் மீதும் வித்தியாசமான வடிவங்கள் அமைந்திருக்கும். இனச்சேர்க்கையின்போது பெண் சிலந்தியை கவருவதற்காக ஆண் சிலந்தி அழகாக நடனமாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mandarin Fish
Mandarin FishImage Credits: Unsplash

2. Mandarin fish: இந்த மீன்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கலர்ஃபுல்லாகவும் இருக்கும். இந்த அரிய வகை மீன்கள் பசிபிக் பெருங்கடலை பூர்வீகமாகக் கொண்டது. இந்த மீன்கள் தண்ணீரில் நீந்துவதை பார்க்க மிகவும் அற்புதமாக இருக்குமாம். கலர்ஃபுல்லாக அழகாக இருக்கும் இந்த மீன் விஷத்தன்மைக் கொண்டதாகும்.

Red Panda
Red PandaImage Credits: Fort Wayne Children's Zoo

3. Red Panda: கரடி வகையை சேர்ந்த இந்த சிவப்பு பாண்டாக்கள் இமய மலைத்தொடர்களிலும், இமயமலையை ஒட்டிய சீனப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதைப் பார்ப்பதற்கு ரொம்பவே குட்டியாக, க்யூட்டாக சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். இந்த சிவப்பு பாண்டாக்கள் பழங்கள், மூங்கில், முட்டை போன்றவற்றை உண்ணும். இந்த சிவப்பு பாண்டாக்கள் மொத்தம் 10 ஆயிரம் முதல் 2,500 வரையே உள்ளன.

Kakapo
KakapoImage Credits: Animal Spot
இதையும் படியுங்கள்:
பூமியில் நடக்கக்கூடிய 3 இயற்கையான அழகிய நிகழ்வுகள்!
Peacock Spider

4.Kakapo: உலகில் உள்ள பறக்க முடியாத கிளி வகைதான் Kakapo. இந்த கிளியை நியூசிலாந்தில் அதிகமாகக் காண முடியும். இது அதிக உடல் எடைக்கொண்ட கிளியாகும். இதன் எடை 4 கிலோவிற்கு மேல் இருக்கும். இந்த வகை கிளியால் பறக்க முடியவில்லை என்றாலும், பல கிலோ மீட்டர்கள் நடக்கக்கூடிய சக்தி இதன் கால்களுக்கு உண்டு. சாதாரண கிளிகளைப் போல மனிதர்கள் பேசுவதை திருப்பி பேச தெரியாது. இந்த கிளியின் ஆயுட்காலம் 100 வருடமாகும். இதன் மீதிருந்து தேன் அல்லது பூவின் நறுமணம் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4 விசித்திரமான உயிரினங்களில் உங்களை மிகவும் கவர்ந்தது எதுவென்று சொல்லுங்க பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com