உருமாறவும் ஓடி ஒழியவும் தனித்துவமான திறமை கொண்ட 5 பறவைகள்!

5 birds with unique abilities
Unique birds
Published on

றவை இனத்தில் பலவகையான பறவைகள் தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும் மற்றும் தங்கள் உணவுத் தேவைகளுக்காகவும், உருவத்தையும் நிறத்தையும் மாற்றியமைத்து, மறைந்து வாழும் தனித்துவமான திறமையைக் கொண்டுள்ளன.

சில பறவைகள் சுதந்திரமாக வானத்தில் பறந்துகொண்டும், மரக் கிளையில் அமர்ந்து பாடிக்கொண்டும் இருக்கையில், இப்படி உரு மாறி ஒழிந்து வாழும் பறவைகள் வாழ்வுக்கும் சாவுக்குமிடையே ஊசலாடுகின்றன என்றே கூறலாம். அவ்வாறான 5 வகை பறவைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

காமன் போட்டூ (Common Potoo): இரவு நேரங்களில் 

நடமாடும் இப்பறவை சென்ட்ரல் மற்றும் சவுத் அமெரிக்காவில் காணப்படுபவை. பகல் நேரத்தில் இது மரக்கிளை மீது நேராக அமர்ந்திருக்கும். சாம்பல் மற்றும் பிரவுன் நிறத்தில் புள்ளிகளுடன் இருக்கும் அதன் இறக்கைகள் மரப் பட்டை போலவே தோற்றமளிக்கும். ஏதாவது ஆபத்து வரும்போது கண்களை இறுக மூடிக்கொண்டு, ஆடாமல் அசையாமல் அமர்ந்து கொண்டிருக்கும். ஒரு பறவை அங்கு உட்கார்ந் திருப்பதை ஒரு வேட்டைக்காரனோ அல்லது பறவை ஆர்வலரோ கண்டுபிடிக்கவே முடியாது.

டானி ஃபிராக்மவுத் (Tawny Frog mouth): ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட இது கிட்டத்தட்ட ஆந்தை போன்ற உருவம் கொண்டது. இதன் இறகுகள் மரப் பட்டையின் நிறத்தையும் டிசைனையும் கொண்டிருக்கும். மரக்கிளையில் அசையாமல்  அமர்ந்திருக்கையில் கிளையின் ஒரு பகுதியாகவே  இப்பறவை தோற்றமளிக்கும். இது மரத்தின் மீது மணிக் கணக்காக தன் கூட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் போது கூட அந்த வழியே செல்லும் எவரும் இது அங்கிருப்பதைக் காண முடியாது.

யூரோசியன் பிட்டேர்ன் (Eurasian Bittern):  ஹெரான் 

பறவையின் தோற்றம் கொண்டது. யூரோப் மற்றும் ஆசியாவின் நாணல் காடுகளில் காணப்படுபவை. பிரவுன் நிறம் கொண்ட இதன் இறகுகளில் மூங்கிலை ஒத்த நீளக் கோடுகள் காணப்படும். ஏதாவது ஆபத்தை அறியும்போது இது தன் அலகை வானை நோக்கி உயர்த்தி, அசையாமல் நின்றுகொள்ளும். 'பிட்டேர்னிங்' என்று கூறப்படும் இந்த போஸில் இது நிற்கையில் அனுபவம் நிறைந்த பறவை ஆர்வலர்களால் கூட இதைக் கண்டு பிடிக்க முடியாது.

அமெரிக்கன் உட்காக் (American Woodcock): குண்டான உருவம் கொண்ட இந்த உட்காக் தரையிலேயே வாழ்ந்து வருபவை. மரங்களிலிருந்து உதிர்ந்து மக்கிய நிலையிலிருக்கும் இலைக் குவியல்களின் இடையே, அதே போன்று தன் நிறத்தையும் உருவத்தையும் மாற்றியமைத்துக் கொள்ளும்.

அச்சுறுத்தல் வரும்போது, பறந்து செல்ல நினைக்காமல், நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று இலைக் குவியல் போலவே தோற்றம் தரும். இதை நாம் கண்களால் காண்பதைவிட இதன் குரலை அடிக்கடி கேட்க முடியும். குறிப்பாக புணர்ச்சிக்காக தன் ஜோடியை அழைக்க பாடிக்கொண்டே இது ஆடும்  'ஸ்கை டான்ஸ் (Sky Dance)' பிரசித்தி பெற்றது.

நைட்ஜார் (Nightjar): அன்டார்ட்டிக்கா தவிர உலகின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். புள்ளிகளுடன் கூடிய இறகுகள் கொண்ட நைட்ஜார், வனத்தின் தரைப் பகுதி, கடினமான புறம்போக்கு நிலம், சருகுகளாலான புல்வெளி என அது இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்றவாறு உருமாறி, அசையாமல் படுத்துக்கொண்டு எதிரிகளிடமிருந்து தப்பிவிடும். இரவில் நடமாடக்கூடிய பறவை இது. ஆகவே பகலில் எவர் கண்ணிலும் படாமலிருக்க உருவத்தை மாற்றி யமைத்து ஒழிந்துகொள்ளும் திறமையுடையது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com