உலகின் 5 நீளமான நதிகள்!

Longest Rivers
Longest Rivers
Published on

ஆறுகள் என்பது இயற்கையாக உருவான நீரோடை. பொதுவாக ஆறுகள் மலைப் பிரதேசங்களில் இருந்து உருவாகிறது. தட்ப வெட்ப நிலை கொண்ட மலைப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து அந்த நீரும் தாழ்வான பகுதி வழியாக சென்று கடலில் கலக்கிறது. அவ்வாறு மலைக்கும், கடலுக்கும் இடைப்பட்ட நீர் செல்லும் வழித்தடத்தையே நாம் ஆறுகள் என்கிறோம். இவை இயற்கையாகவே உருவானது. ஆறுகள் பொதுவாக தூய்மையான நீர் நிறைந்த பகுதியாக உள்ளது.

நைல் நதி: உலகின் மிக நீளமான ஆறுகளில் முதன்மையானது நைல் நதி ஆகும். ஆறுகளில் மிகப் பெரிய ஆற்றுப் படுகை கொண்ட இது 6,650 கி.மீ நீளம் கொண்ட மிக நீளமான ஆறு ஆகும். இது ஆப்ரிக்காவின் வட கிழக்கு பகுதியில் உள்ளது. இது வெள்ளை நைல், நீல நைல் என்ற இரண்டு துணை ஆறுகளை கொண்டுள்ளது.

அமேசான் நதி: இது தென் அமெரிக்காவில் உள்ளது.6400 கி.மீ நீளம் கொண்ட மிகப் பெரிய ஆறு ஆகும். பரப்பளவில் மிகப் பெரிய ஆற்றுப் படுகை கொண்டது. உலகின் சுற்று சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அனகோண்டா வகை பாம்புகள் டால்பின் வகை மீன்கள், பல்வேறு உயிரினங்கள் இந்த ஆற்றில் வசிக்கின்றன.

யாங்சி நதி: உலகின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும். இது சீனாவில் உள்ள மிகப் பெரிய ஆறு ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 5,170 மீ உயரத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள ஆறுகளில் மிக நீளமான ஆறு ஆகும்.

இதையும் படியுங்கள்:
பெண் உடலின் தசையோடு ஆணின் தசை ஒட்டுண்ணியாக இணைந்து வாழும்... என்னடா இது?
Longest Rivers

மிசிசிப்பி நதி: இது வட அமெரிக்காவில் உள்ள நீண்ட பெரிய ஆறாகும். பல வளைவுகள் கொண்டதாக உள்ளது. மிச்சிப்பி என்ற பெயர் இதில் மிசி என்பதற்கு விசாலம், சிப்பி என்றால் தண்ணீர் என்று பொருள். இந்திய வார்த்தைகளின் அடிப்படையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை வளப்படுத்துகிறது. இங்கு உயிரியல் பூங்கா, வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன.

யெனீசீ நதி: உலகின் மிகப் பெரிய 5வது ஆறு ஆகும். இது 5,549 கி.மீ நீளம் கொண்ட ஆற்றுப் படுகை உடையது. பைகால் ஏரியில் இருந்து யெனீசீ ஆறு உற்பத்தி ஆகிறது. 55 வகையான மீன்களின் இருப்பிடமாக உள்ளது. பைக்கால் ஏரி என்பது ரஷ்யாவின் கிழக்கு சைபீரியா பிராந்தியத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது பரப்பளவில் ஏழாவது பெரிய ஏரியாகும். உலகன் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com