காலநிலைக்கேற்ப சில பறவைகள் வேறு இடங்களுக்கு சென்று வசிப்பதுண்டு. அப்படி பறக்கும் சில பறவைகள் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத தூரத்திற்குப் பறக்கும் என்பது தெரியுமா. அப்படிப்பட்ட 5பறவைகள் பற்றி பார்ப்போம்.
இப்பறவைகள் குளிரைத் தவிர்க்கவும் இரைகளுக்காகவும் ஒவ்வொரு வருடமும் இந்த சிறிய பறவை உலகத்தின் ஒரு எல்லையிலிருந்து மறு பக்கத்திற்குச் செல்கிறது. இது சுமார் 60,000மைல்கள் ஒவ்வொரு வருடமும் பயணிக்கிறது. ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் இரண்டு கோடைக்காலம் வருடத்திற்கு தங்குகிறது.
இது மிகத் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும் இப்பறவை 40,000மைல்கள் பறக்கின்றன இது நியூசிலாந்தில் breed செய்கிறது. பிறகு அங்கிருந்து ஜப்பான், அலாஸ்கா மற்றும் காலிஃபோர்னியா போன்ற இடங்களுக்குப் பயணிக்கின்றன. மேலும் இது தனியாகவே பயணிப்பது குறிப்பிடத்தக்கது. கடலை எல்லாம் தாண்டி தனியாகவே பயணம் செல்லக்கூடியது.
ஆஸ்திரேலியாவில் இப்பறவையை மட்டன் பறவை என்று கூறுகிறார்கள். இது குஞ்சுகளை டாஸ்மேனியா மற்றும் தென் ஆஸ்திரேலியா பகுதியில் ஈன்றுவிட்ட பிறகு பசிபிக் கடல் நோக்கிச் செல்கிறது. இது சுமார் 27,000மைல்கள் தூரம் பயணிக்கிறது.இதன் இறகுகள் கடல் மட்டத்தை தாண்டிச் செல்வதற்கு ஏற்றாற்போல் உள்ளன.
இது வருடத்தில் இரண்டுமுறை பயணிக்கிறது. இது அலாஸ்காவில் இருந்து நியூசீலாந்து வரை எந்த இடத்திலும் தங்காமல் தொடர்ந்து 7500 மைல்கள் பறப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இவை ஆர்டிக் கடலில் குஞ்சுகளை ஈன்று குளிர் காலத்தில் தென்கிழக்கு ஆசியா, ஓஷியானா மற்றும் ஆப்ரிக்கா பகுதிகளுக்குச் செல்கிறது. இந்த பயணம் சுமார் 18,000மைல்கள் தூரப் பயணமாகும். இவைகளுக்கு நீளமான மற்றும் வளைந்த அலகுகள் இருப்பதால் இரையை பிடிப்பதற்கு சுலபமாகிறது.
இது சிறிய பறவையாக இருந்தாலும் சக்தி மிக்கதாகவும் உள்ளது இவை ஆர்டிக் பகுதியிலிருந்து காலநிலை மாறுதலில் போது பல ஆயிரம் மைல்கள் பறந்து தென் அமெரிக்கா மற்றும் ஓஷியானா பகுதிக்குச் செல்கின்றன. ஒவ்வொரு வருடமும் 18,000 மைல்கள் பயணிக்கின்றன. இவைகளை ஈரமான பகுதிகளில் இரை தேடுவதை காணலாம். இதன் அலகு கூர்மையாக இருக்கும். சுற்றுச் சூழலுக்கேற்ப தன்னை வெகு விரைவாக மாற்றிக் கொள்ளும் தன்மை படைத்த பறவையாகக் கருதப் படுகிறது.
மேற்கூறிய விஷயங்கள் பறவைகளின் அதீத சக்தியை பறைசாற்றுகிறது.