செல்லப் பிராணிகள் அதன் பெயருக்கேற்றார் போலவே, வீட்டில் உள்ள ஒரு நபரைபோல் செல்லமாக வளர்க்கப்படுகின்றன. பொதுவாகவே, செல்லப்பிராணிகள் என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது நாயாகத்தான் இருக்கும். அதற்கு அடுத்து, பூனை, ஆடு, மாடு, கோழி, புறா, கிளி, மீன்கள் போன்ற உயிர்னங்களையும் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறோம். ஆனால், 'இந்த உயினங்களை எல்லாம் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்களா?' என்று நம்மை வியக்க வைக்கும் வகையில், உலகில் உள்ள வித்தியாசமான செல்லப்பிராணிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாமா?
Hissing Cockroach மடகாஸ்கரில் பரவலாக காணப்படுகிறது. மற்ற கரப்பான் பூச்சிகளைக் காட்டிலும் இவை அளவில் பெரியவை மற்றும் பூச்சி இனங்களிலேயே அதிக ஆயுளைக் கொண்டவை. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் உயிர் வாழக் கூடியவை. இவற்றுக்கு இறக்கைகள் கிடையாது. ஹிஸ்ஸிங் கரப்பான்பூச்சியானது அவற்றின் உடலில் உள்ள சிறுதுளைகள் வழியாக காற்றை வெளியேற்றும்போது ஒருவகையான ஒலி வெளிப்படும். இதனையே 'ஹிஸ்ஸிங்' என்று அழைக்கிறார்கள். பொதுவாக, கரப்பான்பூச்சி வீட்டிற்குள் வந்தால் அதை அடித்து துரத்துவோம். ஆனால், மடகாஸ்கரில் ஹிஸ்ஸிங் கரப்பான் பூச்சிகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
இது வட மற்றும் மத்திய அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. தன் வாலின் அடிப்பகுதியில் இருந்து முடைநாற்றத்துடன் கூடிய (துர்நாற்றம்) ஒருவித திரவத்தை வெளியேற்றுகிறது. இருந்த போதிலும், இந்த விலங்குகள் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த முடைவளிமா விலங்கு பாம்புகளின் விஷத்திற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனவாம். எனவே, இவை விஷப் பாம்புகளை வேட்டையாட பயன்படுத்தப்படுவதாகவும் கருதப்படுகிறது.
Sugar Glider ஆஸ்திரேலியாவில் பரவலாக காணப்படும் கவர்ச்சியான செல்லப்பிராணி. இதனை தமிழில் பறக்கும் அணில் என்று அழைப்பார்கள். மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வினைப் பாயன்படுத்தி காற்றில் பறக்கும் திறன் உடையது. இந்த பறக்கும் அணில் அதன் உரிமையாளர்களிடம் நெறுக்கிப் பழகும் தன்மையுடையது. இதை பாராமரிப்பது அதிக கவனம் மற்றும் சவால்கள் நிறைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில், பறக்கும் அணில் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய உயிரினமாகும்.
இது மெக்சிகோவில் உள்ள Xochimilco ஏரியில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. இந்த உயிரினம் சாலமண்டர் இனத்தைச் சேர்ந்தது. இழந்த கை, கால்களை மீண்டும் உருவாக்கும் திறன் உடைய உயிரினமாக Axolotl அறிப்படுகிறது. கை, கால்கள் மட்டுமில்லாமல், மூளை மற்றும் இதயத்தின் பகுதிகளையும் மீட்டெடுக்கும் பண்பை இது கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உயிரினம் வாழ்வதற்கு குளிர்ச்சியான, சுத்தமான நீர் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் அவசியமானது. தற்போது, இது அழிந்து வரும் உரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெக்சிகோவின் செல்லப்பிராணிகளின் சந்தைகளில் பிரபலமானதாகவும் விளங்குகிறது.
கேபிபாரா தெற்கு அமெரிக்காவில் வளர்க்கப்படும் பிரபலமான செல்லப்பிராணியாகும். இது உலகில் வாழும் மிகப்பெரிய கொறித்துண்ணியாக விளங்குகிறது. கேபிபாரா அதன் உரிமையாளர்கள் அல்லது பிற விலங்குகளிடம் எளிதாக நெருங்கிப் பழகக்கூடியவை. கேபிபாரா ஒரு அரை நீர்வாழ் உயிரினம் என்பதால், இது வாழ்வதற்கு தண்ணீரும் தேவை. மேலும், இவை தண்ணீரில் மிக சிறப்பாக நீந்தும் ஆற்றல் உடையவை. அதோடு, 5 நிமிடங்கள் வரை நீருக்கடியில் இதனால் மூச்சடக்கியும் இருக்க முடியுமாம்.