சூரிய வெளிச்சம் படராத 7000 அடி ஆழ குகைகளும், இறக்கையற்ற விசித்திர பூச்சிகளும்!

சூரிய வெளிச்சம் படாத 7000 அடி ஆழமுள்ள உலகின் மிக ஆழமான குகைகள் பற்றியும், அங்கு வாழும் இறக்கையில்லாத விசித்திர பூச்சிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
குகைகள் | world deepest cave
குகைகள் | world deepest cave AI Image
Updated on

ஐரோப்பா மற்றும் ஆசியா எல்லையில் அமைந்துள்ள ஜார்ஜியா நாட்டின் காகசஸ் மலைத்தொடரில், உறைபனி குளிரும் கடுமையான இருளும் சூழ்ந்த 'விரியோவ்கினா' மற்றும் 'க்ருபேரா' குகைகள் இயற்கை நமக்குத் தந்துள்ள வியக்கத்தக்க படைப்பாகும். தாவரங்களே வளர முடியாத இந்த ஆழமான உலகத்தில், இறக்கைகளே இல்லாத 'ஸ்பிரிங்டெய்ல்' (Springtail) என்ற விசித்திர பூச்சிகள் எவ்வாறு உயிர்வாழ்கின்றன? 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த குகைகள் எவ்வாறு மனிதர்களின் முக்கிய இயற்கை நீர் ஆதாரமாகவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வடிகட்டியாகவும் செயல்படுகின்றன?

இந்த விந்தைகள் நிறைந்த பாதாள உலகத்தின் ரகசியங்களை முழுமையாக அறிய தொடர்ந்து படியுங்கள்!

இறக்கையே இல்லாத பூச்சிகள் வாழும் 7000 அடி ஆழம் 2 டிகிரி குளிர் உள்ள இடம்! எங்கு இருக்கிறது என்று பார்ப்போமா!

மேல் உலகம், நாம் வசிக்கும் பூலோகம், பாதாள உலகம் என மூவுலகங்கள் இருப்பதாக கதைகளில் படித்திருப்போம். ஆனால் நாம் வாழும் இவ்வுலகில் ஒரு இருண்ட உலகம் இருக்கிறது. அந்த உலகத்தில் இறக்கைகளே இல்லாத பூச்சிகள் வசிக்கின்றன. அத்தகைய உலகம் குறித்து இப்பதிவில் காண்போம்.

பூமியின் மேற்பரப்பில் பலவிதமான சிறப்பு கொண்ட குகைகள் பல அமைந்துள்ளன. சில குகைகளில் முனிவர்கள் தவம் செய்தும் ஆதிவாசிகள் வாழ்ந்தும் இருக்கின்றனர். உலகின் நீளமான குகை அமெரிக்காவின் கெண்டுகியில் அமைந்துள்ளது. மற்றொரு நீளமான குகை வியட்நாம் நாட்டிலும், நீருக்கடியில் நீண்ட குகையை மெக்சிகோவும் கொண்டுள்ளன. ஆனால் லைவ் சயின்ஸ்' (Live Science) இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி சூரிய வெளிச்சமே புக முடியாத உலகின் மிக ஆழமான குகை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல சிலந்தி இருக்கா? இந்த பகீர் உண்மையை உடனே படிங்க!
குகைகள் | world deepest cave

7000 அடி ஆழத்தில் இருண்ட உலகம்

ஐரோப்பா மற்றும் ஆசியா என்ற இரு கண்டங்களின் எல்லையில் அமைந்துள்ள ஜார்ஜியா நாட்டின் அப்காஸியா பிராந்தியத்தில் சுண்ணாம்பு பாறை குகைகள் அமைந்துள்ளன. இவையே உலகின் மிக ஆழமான குகைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இக்குகைகளில் 6,560 அடிக்கும் அதிகமான ஆழத்தில் 'விரியோவ்கினா' (Veryovkina) மற்றும் 'க்ருபேரா' (Krubera) என்ற குகைகள் அமைந்துள்ளன. விரியோவ்கினா குகை 7,257 அடி ஆழமும், க்ருபேரா குகை 7,215 அடி ஆழமும் கொண்டவை என அலாஸ்கா தேசிய பூங்காவின் நிலவியல் நிபுணர் பால் பர்ஜர் அளவிட்டு உள்ளார்.

கடுமையான இருள், அதிகமான ஈரப்பதம் மற்றும் இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி வரையிலான உறைபனி நிலவும் இந்த பாதாள குகைகள், காகசஸ் மலைத்தொடர் பகுதியில் அமைந்திருக்கின்றன. அதனால் இங்கு வாழும் உயிரினங்கள் இந்த காலசூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றன. இங்கு ஆழம் அதிகமாக இருப்பதால் தாவரங்கள் வளர்வதில்லை. ஆகையால் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இங்குள்ள விலங்குகள் உணவு உட்கொள்கின்றன.

விசித்திர பூச்சிக்கு இறக்கை இல்லை:

குகைகள் | Springtai insect
குகைகள் | Springtai insectAI Image

இறக்கைகள் இல்லாத 'ஸ்பிரிங்டெய்ல்' (Springtail) என்ற விசித்திர பூச்சி இனத்தை இந்த பாதாள உலகத்தில் ஆராய்ச்சியாளர் ரெபோலெய்ரா மற்றும் அவரது குழுவினர், கண்டுபிடித்துள்ளனர். இவை சுமார் 6500 அடி ஆழத்தில் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் வாழும் பூமியின் மேற்பரப்பிற்கு கீழே பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள இந்த ஆய்வுகள் உதவுகின்றன. இந்த குகைகள் பறந்து விரிந்த பாதாள உலகத்தை காண்பதற்கான ஜன்னல்களாக செயல்படுகின்றன என ஆராய்ச்சியாளர் ரெபோலெய்ரா கூறியுள்ளார்.

இந்த பாதாள குகைகள் இயற்கையின் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு பாறை அடுக்குகளின் வழியே மழை நீரை வடிகட்டி சுத்தமான நீராக மாற்றுகின்றன. மேலும் பாறைகள் கார்பன் நச்சை சேகரித்து வைப்பதால் பூமியின் காற்று மாசுபாட்டையும் பெருமளவு குறைக்கின்றன.

16 கோடி ஆண்டுகள் பழமையான இயற்கை வடிகட்டி:

இந்த அமைப்பு சுமார் 16.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகத் தொடங்கியது. கால மாற்றத்தில் உருவான பிரம்மாண்டமான ஆழமான குகைகள் சுண்ணாம்பு அடுக்குகளாக இறுகி உருவானவை ஆகும்.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவை அதிரவைக்கும் டொர்னடோ புயல் - வியக்க வைக்கும் தகவல்கள்!
குகைகள் | world deepest cave

செங்குத்தாக இருக்கும் சுண்ணாம்பு பாறைகள் வழியாக நீர் எளிதாக பாய்ந்து பாறை இடுக்குகளில் நுழைந்து தரைப்பகுதியை அடைகிறது. அங்கிருந்து ஆறுகள் மற்றும் நீர் நிலைகளுக்கு செல்கின்றன. ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் மனிதர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. அதனால் இந்த ஆழமான குகைகள் மனிதர்களுக்கு இயற்கை நீர் ஆதாரங்களாக செயல்படுகின்றன.

கால மாற்றத்தில் இயற்கையை மாசுபடுத்தாமலும், அழிக்காமலும் பாதுகாத்தால் மனிதர்களுக்கு அவை என்றுமே வரப் பிரசாதங்களாக இருந்து பலன்களை வாரி வழங்கும் என்பதற்கு ஆழமான குகைகளே சான்று.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், பூமியின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் அறியப்படாத இயற்கையின் விந்தைகள் மற்றும் அறிவியல் ரகசியங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, நமது கிரகத்தின் விசித்திரமான சுற்றுச்சூழல் அமைப்புகள் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com