மனிதர்களை விட குதிரைகள் அதிகம் வாழும் நாடு!

மனிதர்களை விட குதிரைகள் அதிகம் வாழும் நாடு!
Published on

லகில் மக்கள் தொகை குறைவாகக் கொண்ட நாடுகளில் ஒன்றாக மங்கோலியா அறியப்படுகிறது. இந்த நாட்டில் 35 லட்சத்துக்கும் குறைவாகவே மக்கள் தொகையே இருக்கிறது. ஆனால், அந்த நாட்டின் பரப்பளவுடன் ஒப்பிடும்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2 பேர் மட்டுமே வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த நாடு ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைந்திருக்கிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட அந்த இரு நாடுகளுக்கு மத்தியில் மக்கள் பெருக்கம் இல்லாத வெறுமை நாடாக மங்கோலியா  விளங்குவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், அந்த நாட்டின் மக்கள் தொகையை விட, குதிரைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதாவது, அங்கு நாற்பது லட்சம் குதிரைகள் இருக்கின்றன. அந்த நாட்டுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு குதிரைகளைத்தான் பயண சவாரிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மங்கோலிய தலைநகர் உலன் பாதரில்தான் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி பேர் வசிக்கிறார்கள் என்பதும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இத்தனைக்கும் இந்த நாடு இயற்கை அழகு  சூழ்ந்த பிரதேசமாக திகழ்கிறது.

காடு, மலை, நீர்நிலைகள், பாலைவனம் என இயற்கையின் அத்தனை அம்சங்களையும்  ஒருங்கே  கொண்டு இந்த நாடு திகழ்கிறது. அந்த நாட்டின் சில பகுதிகளில்  வயல்வெளிகள் இல்லை. காய்கறிகள் பயிரிடுவதற்கு சாத்தியமான சூழல் இல்லாததே அதற்குக் காரணம். அதனால் அங்கு வசிப்பவர்கள், விலங்கினங்களின்  இறைச்சி, பால் போன்றவற்றைத்தான் உணவாக உட்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com