ஆறு அல்லது கடலுக்கு அருகில் உருவாகியுள்ள உப்பங்கழிகள் (backwater), அடர்ந்த காடுகள், பரந்து விரிந்த ஈரமான சதுப்பு நிலம் போன்ற இடங்கள், பறவைகளின் உணவு, உறைவிடம், இனப் பெருக்க வசதி போன்ற வாழ்வாதாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்குமாயின் அங்கு பல வகையான பறவையினங்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கும். இதையே 'பறவைகள் சரணாலயம்' (Bird Sanctuary) என அழைப்பதுண்டு.
இந்த மாதிரியான இடங்களுக்கு வெளிநாடுகளிலிருந்தும் பல வகையான பறவைகள் சீசனுக்காக பல மைல்கள் பறந்து இடம் பெயர்ந்து (Migrated) வந்து தங்கிச் செல்வதும் உண்டு. பறவை ஆர்வலர்கள் (bird watching enthusiasts) இவ்விடங்களுக்குச் சென்று பறவைகளை கண்காணித்து தகவல் சேகரிப்பதும் வழக்கமானதொன்று. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பறவைகள் சரணாலயங்கள் சிலவற்றைப் பற்றின விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.குமாரகோம் பறவைகள் சரணாலயம், umarakom Bird Sanctuary கேரளா:
கேரளாவில், வேம்பநாடு என்னும் நன்னீர் நிறைந்த பெரிய ஏரியின் உள்ளே அமைந்துள்ள சிறிய தீவு இது. சைபீரியன் கிரேன்ஸ், ஹெரான்ஸ், எக்ரெட்ஸ், மற்றும் கிங்ஃபிஷர்ஸ் போன்ற வெளிநாட்டுப் பறவைகளும் சீசனில் இங்கு வந்து தங்கிச்செல்வது வழக்கம். இங்குள்ள அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களில் பல வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருவதைக்காண நிறைய சுற்றுலாப் பயணிகளும், பறவை ஆர்வலர்கள் பலரும் வந்து செல்வதுண்டு. அவர்கள் படகு மூலம் இத் தீவையடைந்து, பசுமை நிறைந்த சூழலில் அரியவகைப் பறவைகளை கண்டு களிக்கின்றனர்.
இங்குள்ள சரணாலயத்திற்கு சுமார் 370 வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகள் வந்து செல்வதால் இது உலகப்புகழ் பெற்றுள்ளது. சைபீரியா, மத்திய ஆசியா மற்றும் பல நாடுகளிலிருந்தும், சைபீரியன் கிரேன்ஸ், ஸ்பாட் பில்ட் பெலிகான் மற்றும் கிரேட்டர் ஃபிளமிங்கோ போன்ற பறவைகள் இங்கு வந்து குளிர்காலங்களில் வாழ்கின்றன.
நன்கு பழக்கப்பட்ட கண்கள் மற்றும் டெலெஸ்கோப் மூலம் இவற்றைக் காணலாம். சைக்கிள் பாதையில் சைக்கிளில் சென்றும் பறவைகளை குறைந்த தூரத்தில் பார்க்கலாம். அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த சரணாலயத்திற்கு சென்றால் அதிகமான அளவில் பறவைகளைக் காணமுடியும்.
மேற்குத் தொடர்ச்சி மலயருகில் அமைந்துள்ள இந்த சரணாலயம் கேரளாவின் மிகப் பெரிய சரணாலயம். இங்கு மலபார் கிரே ஹார்ன்பில் மற்றும் கிரேட் ஹார்ன்பில் போன்ற உள்ளூர் பறவைகள் உள்ளிட்ட 300 க்கு மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். பாரடைஸ் ஃபிளை கேட்ச்சர் மற்றும் பாப்லெர்களுக்கு இது ஒரு சிறந்த வாழ்விடமாக உள்ளது.
அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரையிலான குளிர் காலங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் இங்கு செல்லும்போது அதிகளவு வண்ண வண்ணப் பறவைகளையும் அவற்றின் 'கீச்' ஒலியையும் ரசிக்கலாம்.
உத்தரபிரதேசத்தில், டெரை (Terai) பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் புல்வெளிகள், ஈரமான சதுப்பு நிலம், மரங்களடர்ந்த காடுகள் என பறவைகள் வாழ்வதற்கு ஏற்றவாறு அனைத்து வசதிகளும் உள்ளன. அரிய வகையான மற்றும் அழிவின் விளிம்பிலிருக்கும் பெங்கால் ஃபுளோரிக்கான், இந்தியன் பாரடைஸ் ஃபிளை கேட்ச்சர் மற்றும் கிரேட் ஹார்ன்பில் உள்ளிட்ட 450 இனத்தை சேர்ந்த பறவைகளை இங்கு காண முடியும். சாதகமான சுற்றுச்சூழல் அமைந்துள்ள இந்த இடத்தில் பறவை ஆர்வலர்கள், உள்ளூர் மற்றும் இடம் பெயர்ந்து வந்த அநேக வகையான பறவைகளை காண்பது சுலபம். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் இங்கு செல்ல உகந்தது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய உவர் நீர் நிறைந்த ஏரி இது. வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இடம் பெயர்ந்து வந்து தங்கிச் செல்வதற்கு ஏற்ற சரணாலயம். ஃபிளமிங்கோஸ், பெலிக்கான்ஸ், ஹெரான்ஸ் மற்றும் நீரில் நடந்து செல்லும் பலவகை வாத்துகள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் அதிகளவு இடம் பெயர்ந்து வந்த பறவைகளை இங்கு காணலாம். பறவையியல் ஆய்வாளர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் படகில் சென்றும் பறவைகளை பக்கத்தில் சென்று பார்வையிடலாம்.