
தங்கத்தை விட 100 மடங்கு அதிக விலைகொண்ட ஒரு அரிய வகை மரம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இந்த மரத்தின் பெயர் கைனம் மரம். இது மிக அரிதான மரம் ஆகும். இது தனித்துவமான மயக்கும் நறுமணத்திற்குப் பெயர் பெற்றது.
கைனமரத்தின் விலை ஒரு கிராமுக்கு 8.50 லட்சத்துக்கு மேல். அதாவது 10 கிராம் கைனமரத்தின் விலை சுமார் 85 லட்சமாகும். சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியா காடுகளில் காணப்படும். அகர்வுட் மரங்களிலிருந்து கைனம் பெறப்படுகிறது. இந்தியாவில் மிகவும் அரிதான கைனமரங்கள் அசாமில் காணப்படுகின்றன. அதனால் அசாம் இந்தியாவின் அகர்வுட் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்குமுன் ஷாங்காயில் 2 கிலோ கைன மரம் 154 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. மஹ்ஃபே என்ற நபர் 600 ஆண்டுகளுக்கும் மேலான 16 கிலோ கைனமரத்தை கண்டுபிடித்து அதை 171 கோடிக்கு விற்றதாகத் தெரிகிறது.
கைன மரம் ஏன் விலை உயர்ந்ததாக இருக்கிறது?
அகர்வுட் ஒரு தனித்துவமான இனிமையான நறுமணத்துடன் கூடிய சிறப்பு வகை பிசினை உற்பத்தி செய்கிறது. இந்த செயல்முறை முழுமையடைய பல ஆண்டுகள், ஏன் பலதசாப்தங்கள் கூட எடுக்கும். இதனால்தான் கைனம் பூமியின் அரிதான மரமாக மாறுகிறது. இது தூபம் வாசனைத் திரவியங்கள் மற்றும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. அகர்வுட் மரத்தின் பிசின்தான் மரத்தை விலைமதிப்பற்றதாக மாற்றுகிறது.
அரபு நாடுகளில் இதில் கவர்ச்சியான வாசனை திரவியங்கள் மற்றும் பெர்ஃப்யூம் தயாரக்கப்படுகிறது. கொரியாவில் கைனம் மருத்துவ ஒயின் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் சிறப்பு நறுமணப் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் அதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. தங்கத்தைவிட அதிக விலைக்கு விற்கப்படும் ஒரே மரம் கைனமரம்தான்.