காற்றை சுத்தம் செய்யும் ஃபெர்ன் தாவரங்கள்: சில சுவாரஸ்ய உண்மைகள்!

fern plant
fern plant
Published on

பெர்ன் தாவரங்கள் சிறந்த உட்புற தாவரங்களை உருவாக்குகின்றன மற்றும் அவற்றின் பிற வகைகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வீட்டுத் தாவரங்கள் ஆகும். இதன் இலைகள் ஃப்ரண்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. சரிகை போன்ற இலைகளைக் கொண்ட ஃபெர்ன் தாவரங்கள் பல சுவாரஸ்யமான உண்மைகளைக் கொண்டுள்ளன.

ஃபெர்ன் தாவரங்கள் வாஸ்குலர் தாவர பிரிவான ஸ்டெரிடோஃபைட்டா வகை ஆகும். உலகின் பழைமையான தாவரங்களில் ஒன்றான ஃபெர்ன் தாவரத்தில் கிட்டத்தட்ட 10,560 இனங்கள் உள்ளன. இவை பூக்களையோ, விதைகளையோ தாக்குவதில்லை. ஸ்போர்ஸ் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. சிலவகை ஃபெர்ன்கள் வருடத்திற்கு ஒருமுறை குறுகிய இரவில் பூக்கும். இந்தப் பூவின் அரியக்காட்சி, பார்ப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் செழுமையை அளிக்கும். இதன் தாவரவியல் பெயர் பாலிபோடியோப்சிடா. ஃபெர்ன் தாவரங்களால் எந்த கால நிலையிலும் வாழ முடியும். அவற்றின் கடினத் தன்மை உலகெங்கிலும் மிகவும் வளர்ந்த தாவரங்களில் ஒன்றாக இருக்கிறது. அவை வெப்ப மண்டலப் பகுதியில் வளர வசதியாக இருக்கும். ஃபெர்ன் செடிகள் சாதகமான சூழலில் 100 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை.

ஃபெர்ன் தாவரத்தின் நன்மைகள்: உயிர் உரமாக, அலங்கார தாவரங்களாக மற்றும் அசுத்த மண்ணை சரி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. வளி மண்டலத்தில் இருந்து சில இரசாயன மாசுக்களை அகற்றும் திறனுக்காக அவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றும் அசோலா போன்ற சில நீர் ஃபெர்ன் இனங்கள் நைட்ரஜனை சரிசெய்து நெற்பயிர்களின் நைட்ரஜன் ஊட்டச்சத்துக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. ஃபெர்ன்கள் பைட்டோபாகஸ் பூச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்.

மருத்துவ சிகிச்சைகள்: இத்தாவரம் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. வாத நோய், ஆஸ்துமா, தொண்டை வலி, தட்டம்மை, காசநோய், நுரையீரல் நெரிசல், இருமல், பலவீனமான இரத்தம், கோனோரியா, வயிற்று வலி, காலரா, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, நோய்த் தொற்றுகள், வயிற்று பிடிப்புகள், தலைவலி ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

காற்றை சுத்தம் செய்கிறது: ஃபெர்ன் தாவரங்கள் நல்ல உட்புறத் தாவரங்கள். அவை பச்சை நிறக் கொத்து போல இருக்கும். அவை காற்றில் இருந்தும், மண்ணில் இருந்தும் கனரக உலோகங்களை உறிஞ்சும் திறன் கொண்டது. அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அவை மாசு தடுப்புகளாக செயல்படுவதோடு, மாசுபட்ட காற்றை சுத்தப்படுத்துகிறது. இதை வீட்டில் வைக்கும்போது வானிலை தூய்மையை மேம்படுத்த உதவுகின்றது.

இதையும் படியுங்கள்:
இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!
fern plant

ஈரப்பதத்தை கட்டுப்படுத்துதல்: ஃபெர்ன்கள் இயற்கையாக ஈரப்பதத்தை சீராக வைக்கக்கூடிய தன்மை கொண்டவை. இது அறையின் உள்நிலை ஈரப்பதத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.

மன அமைதி மற்றும் அழகியல் நன்மைகள்: ஃபெர்ன் தாவரங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், பராமரிக்க எளிதானவை மற்றும் அறையை அழகுபடுத்துகிறது.

விசிறி போன்ற அமைப்பால் சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக்குதல்: ஃபெர்ன்கள் பசுமையான இதழ்களைக் கொண்டதால் சூடான இடங்களில் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியான சூழலை உருவாக்குகின்றன.

இயற்கை பூச்சி மருந்தாக செயல்படுதல்: ஃபெர்ன் தாவரங்கள் சில வகை பூச்சிகளை கட்டுபடுத்தும் திறன் கொண்டவை.

ஆகவே, ஃபெர்ன் தாவரங்களை சீரான ஈரப்பதம் மற்றும் நிழலான இடத்தில் சிறப்பாக வளர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com