பெட்ரோல் தரும் மரங்கள்!

தண்ணீர் மரம்
தண்ணீர் மரம்
Published on

ரங்கள் பெரும்பாலும் நிழல் தரும், இன்னும் சில மரங்கள் காய் மற்றும் கனிகளைக் கூடத் தரும். ஆனால், சில மரங்கள் குடிப்பதற்கு தண்ணீரையும், எரிபொருளான பெட்ரோலையும், ஊட்டச் சத்து மிகுந்த பாலையும் தருகின்றன என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கின்றது. இனி, இந்த தண்ணீர் மரம், பெட்ரோல் மரம் மற்றும் பால் மரங்களைக் குறித்துக் காண்போம்.

தண்ணீர் மரம்: தண்ணீர் பழம் (water melon) பற்றி எல்லோருக்கும் தெரியும். அது என்ன தண்ணீர் மரம்? ஆப்பிரிக்க காடுகளில், 'Baobab' or 'bottle tree' எனப்படும் மரம் அதன் தண்டுகள் மற்றும் கிளைகளில் ஏராளமான தண்ணீரை சேமித்து வைத்திருக்கின்றன. இப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் தண்ணீர் பஞ்சம் வரும்போது இந்த மரங்களில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்!

பெட்ரோல் மரம்
பெட்ரோல் மரம்

பெட்ரோல் மரம்: தண்ணீர் மரமாவது பரவாயில்லை; நிலத்தடி நீரை தனது வேர்கள் மூலம் உறிஞ்சி சேமித்து வைத்துக்கொள்கிறது எனலாம். ஆனால், அமேசான் காடுகளில் உள்ள, 'Copeferra' எனும் ஒரு வகை மரத்தின் கிளைகளில் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான பெட்ரோல் கிடைக்கிறது. இந்தப் பெட்ரோலை அப்படியே நேரடியாக வாகனங்களுக்கு நிரப்பலாம். ஒரு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த மரங்களில் இருந்து 4000 லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது என்பது ஆச்சரியம்தான்.

பால் மரம்
பால் மரம்

பால் மரம்: பெட்ரோல் மரங்கள் கூட பூமியின் மிக ஆழத்தில் இருக்கும் பெட்ரோலை உறிஞ்சி சேமித்து வைத்துக்கொள்கிறது என்று கூறலாம். ஆனால், வடக்கு அமெரிக்காவில் உள்ள வெனிசுலா பகுதியில் காணப்படும் ஒரு வகை மரங்கள் பால் சுரக்கின்றன. ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் பால் (Sap) எடுப்பதைப் போலவே, இந்த மரங்களின் பாலையும் இப்பகுதி மக்கள் சேகரிக்கின்றனர். இதில் உள்ள உணவுச் சத்துக்கள் (Nutrients) பசும்பாலில் உள்ளதைப் போலவே சத்து மிகுந்ததாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தப் பாலை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் உடலுக்கு சக்தி தரும் உணவாகவே எண்ணி அருந்துகின்றனர். இவற்றையெல்லாம் காண்கையில், இயற்கைக்கு மறு பெயர்தான் அதிசயமோ என்று எண்ணத் தோன்றுகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com