நீண்ட நாட்கள் பூக்காத உங்கள் வீட்டு பூச்செடியை பூக்க வைக்க எளிய வழி!

பூச்செடிக்கு இயற்கை உரம்
பூச்செடிக்கு இயற்கை உரம்
Published on

ம் வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளை ஆசை ஆசையாய் வளர்ப்போம். ஆனால், அவை நீண்ட நாட்களாகியும் பூ பூக்கவில்லை என்றால் நாம் மிகவும் கவலைப்படுவோம். உடனே அந்தச் செடிகளுக்கு ரசாயன உரங்கள் எதையாவது போடலாமா என்று கூற யோசனை வரும். ஆனால், அதற்கு முன் உங்கள் வீட்டில் இருக்கும் மண்ணை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இதனால் அந்த மண்ணில் என்னென்ன உயிர் சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டால், அதற்கு ஏற்றவாறு உரம் தயார் செய்து மண்ணுக்குக் கொடுக்கலாம்.

ஆனால், ரசாயன உரங்களை நம்புவதை விட இயற்கை உரங்களை நம்புவதே நமக்கு சிறந்த வழியாகும். இதனால் மிக எளிமையாக உங்கள் வீட்டு பூந்தொட்டிகளில் இருக்கும் பூச்செடிகளை பூத்துக் குலுங்க வைக்க முடியும். அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பூச்செடியை பூத்துக் குலுங்க வைக்க இயற்கை உரம் தயாரிக்கும் முறை: வாழைப் பழத்தோல் - 4, முட்டை ஓடு - 5, எப்சம் உப்பு - 1 டீஸ்பூன், தண்ணீர் - 5 லிட்டர் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் எடுத்து வைத்துள்ள 4 வாழைப்பழத் தோல்களையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி, காய வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

அடுத்து, நாம் எடுத்து வைத்துள்ள 5 முட்டை ஓடுகளையும் நிழலில் காய வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எப்சம் உப்பினை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் வாழைப்பழத்தோல் பொடி மற்றும் 1 டீஸ்பூன் முட்டை ஓடு பொடி இரண்டினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கணவன் மனைவியிடம் பேசக்கூடாத 7 விஷயங்கள்!
பூச்செடிக்கு இயற்கை உரம்

அதன் பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 5 லிட்டர் தண்ணீருடன் நாம் கலந்து வைத்துள்ள எப்சோம் உப்பு, வாழைப்பழத்தோல் பொடி மற்றும் முட்டை ஓடு பொடி கலவையை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். பின்னர் இதனை எடுத்து உங்களின் பூச்செடிகளின் வேர்களில் ஊற்ற வேண்டும்.

இப்படி வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பதை நீங்களே காணலாம். இயற்கையோடு நாம் இணைந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்மை என்பதை சாதாரண பூச்செடிகளை பூ பூக்க வைக்கும் இந்த முறையிலேயே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com