இயற்கை சில விலங்குகளுக்கு ஓடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பான வெளிப்புற உறைகள் போன்ற அமைப்பை வழங்கியுள்ளன. அந்த விலங்குகளுக்கு இயற்கையான கவசம்போல விளங்குகின்றன. அவற்றை பாதுகாத்து அவை உயிர் வாழ உதவுகின்றன. உடலில் ஓடுகள் கொண்ட சில விலங்குகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆங்கிலத்தில் இவை பேங்கோலின்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் உடலின் மேற்பரப்பில் ஒரு தனித்துவமான இயற்கையான கவசம் உண்டு. அது கெரட்டின் எனப்படும் செதில்களால் உருவாகின்றன. பிற விலங்குகள் வேட்டையாட வரும்போது தன்னை ஒரு இறுக்கமான பந்துபோல கவசத்திற்குள் சுருட்டிக் கொண்டு பதுங்கிக்கொள்கின்றன.
நத்தைகள் தமது முதுகில் சுழல் வடிவ ஓட்டை சுமந்து செல்கின்றன. இந்த ஓடு கால்சியத்தால் ஆனது. நத்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான வீடாக செயல்படுகிறது. மேலும் அவை நத்தைகளின் உடல் ஈரப்பதமாக இருக்க உதவுகிறது.
மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் உயிரினமான ஆமைகள் தமது முதுகில் கடினமான ஓடுகளை கொண்டிருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழும் ஒரு உயிரினம் ஆமைகள். இந்த கடினமான ஓடுகள் ஆமைகளை காடுகள், பாலைவனங்கள் என பல்வேறு வாழ்விடங்களில் செழித்து வாழ உதவுகின்றன.
கடலில் வாழும் ஆமைகள் நீந்துவதற்கு ஏற்றவாறு பாதுகாப்பான ஓடுகளைக் கொண்டுள்ளன. அவை மென்மையானதாக இருந்தாலும் ஒரு கவசம் போல செயல்பட்டு அவை தண்ணீருக்குள் நீந்த உதவுகின்றன. இது அவற்றின் கடல் வாழ்க்கை முறைக்கு அவசியமானது.
நண்டுகளுக்கு கடினமான வெளிப்புற ஓடுகள் உண்டு. அவை வளர வளர பழைய ஓட்டை உதிர்த்துவிட்டு புதிய பெரிய ஓடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. இது உருகுதல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த விலங்கு கவசம் அணிந்த பாலூட்டி என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய ஓடு கடினமாக இருந்தாலும் இது நெகிழும் தன்மை கொண்டது. அதனால் இந்த விலங்கு ஆபத்து சமயங்களில் தன்னை இறுக்கமான பந்து போல சுருட்டிக்கொள்ள உதவுகிறது. ஓடு இந்த விலங்கின் மென்மையான வயிற்றை ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது.
வண்டுகளுக்கு மிகவும் வலுவான வெளிப்புற தோல் உள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக இயற்கை வண்டுகளுக்கு தந்திருக்கும் ஒரு பாதுகாப்பு அம்சம் ஆகும். வண்டுகளின் இறக்கைகளுக்கு மேலே கடினமான உறைகளும் உள்ளன. அவை எலிட்ரா என்று அழைக்கப்படுகின்றன. கேடயங்கள் போல செயல்பட்டு வண்டுகள் பல்வேறு சூழல்களில் செழித்து வளர உதவுகின்றன.
மற்ற நண்டுகளைப்போல் அல்லாமல் ஹெர்மிட் நண்டுகளின் உடலில் இயற்கையாக ஓடுகள் வளர்வதில்லை. அதற்குப் பதிலாக அவை பிற கடல் உயிரினங்கள் உதிர்க்கும் வெற்று ஓடுகளை கண்டுபிடித்து அவற்றுக்குள்ளே சென்று வாழ்கின்றன. அவை வளர வளர அதனுடைய உருவத்திற்கு ஏற்றார்போல பெரிய ஓடுகளை கண்டுபிடித்து அதற்குள்ளே வாழ்கின்றன.
குதிரை லாட நண்டுகள் கவசம் போன்ற ஓடுகளையும் கூரான வால்களையும் கொண்வை. இந்த தனித்துவமான ஓடுகள் அவற்றுக்கு மிகுந்த பாதுகாப்பு வழங்குகின்றன. மண்ணில் திறம்பட நகர்ந்து செல்ல உதவுகின்றன.
இவை கடினமான வெளிப்புற எலும்புக்கூடுகளை கொண்டவை. கடினமான இடங்களில் கூட உயிர் வாழ உதவுகின்றன. மேலும் சிலந்திகள், தேள்கள், இறால்கள், வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சிகள், சில எறும்புகள் போன்றவை வெளிப்புற எலும்புக்கூடுகளை கொண்டுள்ளன. அவை பாதுகாப்பு கவசம்போல செயல்படுகின்றன.