சீனா உருவாக்கிவரும் செயற்கை சூரியன்!

Artificial sun being developed by China.
Artificial sun being developed by China.
Published on

சீனாவில் மின்சாரப் பயன்பாடு அதிகரித்து வருவதால், செயற்கையாக சூரிய ஒளியை உருவாக்கி அதை வைத்து மின்சாரம் தயாரிக்கும் பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சூரியன் போல வரம்பற்ற மின்சார ஆற்றல் மூலத்தை உருவாக்கும் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருகிறது.

கிரீன் எனர்ஜி முறையில் மின்சாரத்தைத் தயாரிக்க சீனா பூமியிலேயே செயற்கையாக சூரியனை உருவாக்கி வருகிறது. இந்த செயற்கை சூரியனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தால், நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யலாம் என சீனா நம்புகிறது. இவர்கள் இந்தத் திட்டத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளனர். செயற்கை சூரியனை உருவாக்கப் பயன்படும் இயந்திரத்தின் சமீபத்திய பதிப்பு மூலமாக ஒரு மில்லியன் ஆம்பெயர்களுக்கு மேல் பிளாஸ்மா மின்னோட்டத்தை உருவாக்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

'டோகாமாக்' என்ற இயந்திரத்தின் மூலமாக இதை முதன்முறையாக அவர்கள் செய்துள்ளனர். இதனால் சுத்தமான, முடிவில்லாத மற்றும் பாதுகாப்பான ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆராய்ச்சியில் உருவாகும் சூரியனைப் போன்ற அதிகப்படியான ஆற்றலில் உருவாகும் வெப்பத்தையும், ஒலியையும் சேமித்து வைத்தால், ஒரு நாட்டுக்குத் தேவையான மின்சார சக்தியை சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பூர்த்தி செய்யலாம் என்று கூறப்படுகிறது.

பல நாடுகள் அணு மின் நிலையங்களைப் பயன்படுத்தி, அணுப்பிளவு மூலமாக மின்சாரத்தை உருவாக்குகிறது. ஆனால், இந்தச் செயல்முறையில் அதிகப்படியான கதிரியக்கக் கழிவுகள் வெளியாவதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து நிறைந்ததாகும். அதேசமயம் சீனாவின், 'டோகாமாக்' இயந்திரத்தின் மூலம் ஆற்றலை உருவாக்கும்போது அதிலிருந்து வெளியாகும் கதிரியக்கக் கழிவுகள் மிகக் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும் என்கின்றனர்.

சீனாவைப் போலவே, உலகின் பல்வேறு நாடுகள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல்முறையில் ஹைட்ரஜன் அணுக்களை பல மில்லியன் டிகிரி செல்சியஸ்க்கு சூடாக்கி, அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெப்ப ஆற்றல் உருவாகிறது. இருப்பினும், இந்த செயல்முறையில் அந்த சாதனம் வெடிக்காமல் இருப்பதைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

இந்த விஷயத்தில் சீனர்கள் ஒரு படி முன்னேறி இருப்பது பாராட்டுதலுக்குரியது என்றாலும், இதிலும் அதிகப்படியான ஆபத்துக்கள் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com