உடலுக்கு நல்லது; வணிகத்துக்கும் ஏற்றது: பயனளிக்கும் கற்றாழை!

உடலுக்கு நல்லது; வணிகத்துக்கும் ஏற்றது: பயனளிக்கும் கற்றாழை!

ருத்துவ குணமிக்கதாகவும் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படும் தாவரமாகவும் இருப்பதால் கற்றாழை உற்பத்திக்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கற்றாழை தேடி பயிரிடப்படும் பயிராக இல்லாமல். ஆங்காங்கே விளைந்து பயன் தரும் பயிராக இருந்தது. ஆனால். தற்போது அதனுடைய தேவையும் பயன்பாடும் அதிகரித்து இருப்பதன் காரணமாக கற்றாழையை வருமானத்துக்காக பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. மேலும், கற்றாழை மருத்துவ குணமிக்கது என்பதாலும், சருமத்துக்கு பூசப்படும் மருந்துகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கண் திருஷ்டி பொருளாகவும் கற்றாழை பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கற்றாழை பூக்கும் தாவர வகையை சேர்ந்தது. சோற்றுக்கற்றாழையை, ‘குமரிக்கன்னி’ என்றும் அழைப்பர். மேலும், கற்றாழையில் 650 வகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை மருத்துவ குணம் மிக்கவை. குறிப்பாக, கற்றாழை அழகு சாதனப் பொருட்களுக்கு மூலப்பொருளாக பயன்படுகிறது. மேலும், சரும கிரீம்கள், சேவிங் கிரீம்கள், ஷாம்புகள் ஆகியவற்றின் தயாரிப்புக்கான முக்கிய மூலப் பொருளாகவும் கற்றாழை உள்ளது.

கற்றாழை வறண்ட வெப்பமண்டலப் பயிர் என்பதால் அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடியதாக உள்ளது. இதனால் கற்றாழையை எந்த காலத்திலும், எளிதில் பயிரிட்டு பயன் பெறலாம். கற்றாழையை பயிரிட பெரிய நிதியோ, அதிக உழைப்போ தேவையில்லை. கற்றாழையை பயிரிட்டால் மட்டும் போதுமானது. அது தானாக வளர்ந்து பயன் தரக்கூடிய தாவரமாகவும் விளங்குகிறது.

மேலும், கற்றாழை வேர், கிழங்கு மற்றும் வேர் பகுதியில் இணைந்து எழும் கன்றுகள் ஆகியவை இனப்பெருக்க பகுதிகளாகும். இதனால் கற்றாழையை அறுவடை செய்யும் பொழுது கிழங்கு பகுதியை மட்டும் எடுத்து மண்ணில் புதைத்து நட்டு வைத்தால் தானாக முளைத்து பயன் தரும். தண்ணீர், வெயில் என்று எல்லா இடங்களையும் தாங்கி முளைக்கக்கூடிய தாவரமாகும் இது. இதனால் கற்றாழை விவசாயம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும், கற்றாழை நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதாலும், அதிக பொருள் செலவோ, உடல் உழைப்போ தேவையில்லை என்பதாலும் கற்றாழையை பயிரிடுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com