ஜேட் தாவரத்தின் தாவரவியல் பெயர், ‘கிராசுலா ஓவாடா’ ஜேட் செடி லக்கி பிளாண்ட் மற்றும் வாஸ்து செடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரம் கண்களைக் கவரும் தாவரம் மட்டுமல்ல, பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது.
ஜேட் செடியின் நன்மைகள்: காற்றை சுத்தம் செய்யும் திறனை உள்ளடக்கி காற்றின் தரத்தை மேம்படுத்தும். இரவில் அதன் சிறிய துளைகளை திறந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது. இதை படுக்கை அறையில் வைத்திருப்பதால் நல்ல தூக்கத்தைத் தரும்.
ஜேட் செடியின் வகைகள்: உலகில் 40 வகையான ஜேட் தாவரங்கள் உள்ளன. அதில் பிரபலமான 8 வகைகளைப் பற்றி அறிவோம்.
1. பொதுவான ஜேட்: இது மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்றாகும். பராமரிக்க எளிதானது. மேலும், வேகமாக வளரும். வசந்த காலத்தில் சிறிய முத்து போன்ற வெள்ளை நிற பூக்கள் ஜேட் செடியில் பூத்து அதன் அழகை மேம்படுத்தும்.
2. நீலப் பறவை ஜேட்: இது, ‘ப்ளூ பேர்ட்’ என்று அழைக்கப்படுகிறது. இது அடர்த்தியான கிளைகளைக் கொண்ட பிரபலமான ஜேட் தாவரமாகும். வசந்த காலத்தின் துவக்கத்தில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கும். இச்செடி முழு உயரத்திற்கு முதிர்ச்சி அடைய தொட்டிகளில் வைக்கப்படுகின்றன.
3. கோல்லம் ஜேட்: இவை அடர்த்தியான தண்டுகள் மற்றும் கடினமான இலைகளைக் கொண்டுள்ளன. ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ படத்திலிருந்து இது கோல்லம் என்ற சொல்லைப் பெற்றது. அதன் விளிம்புகளில் சிவப்பு நிறத்துடன் குழாய் போன்ற இலைகள் உள்ளன. சரியான சூழ்நிலையில், கோடைக்காலத்தில் சிறிய இளஞ்சிவப்பு பூக்களை பூக்கும்.
4. வெள்ளி டாலர் ஜேட்: இது, ‘கிராசுலா ஆர்போரெசன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகளின் விளிம்புகள் சிவப்பு நிறத்துடன் நீல சாம்பல் நிறத்தையும் பெற்றிருக்கும். தடிமனான தண்டுகள் மற்றும் முட்டை வடிவ இலைகளுடன் இந்த வெள்ளி டாலர் ஜேட் 4 அடி உயரம் வரை வளரும். வசந்த காலத்தில் அல்லது கோடையின் இனிமையான மாதத்தில் தாவரத்தில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு பூக்கள் பூக்கும்.
5. துறைமுக விளக்குகள்: இதன் தாவரவியல் பெயர், ‘கிராசுலா ஓவாடா ஹார்பர் லைட்ஸ்’ இந்த சதைப்பற்றுள்ள செடியில் அடர்த்தியான இலைகள் உள்ளன. மேலும், இதன் இலைகளை இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்தலாம். இது ஒரு நடுநிலை PH அளவை கொண்டுள்ளது. மற்றும் இது வளர குறைந்த நீர் தேவைப்படுகிறது. இந்த செடியை வளர்க்க சிறந்த நேரம் மார்ச் முதல் ஜூன் வரை ஆகும்.
6. லேடி ஃபிங்கர்ஸ் ஜேட்: இது மிதமான வெப்பப் பகுதிகளில் வளரும். இதன் குழாய் இலைகள் இனப் பெருக்கத்திற்கு பயன்படும். இந்த தாவரம் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் நன்றாக வளரும். மற்றும் அதிக தண்ணீர் தேவைப்படாது. இதன் பூக்கள் மிக சிறியதாக இருக்கும்.
7. ஹாபிட்: ஹாபிட் என்ற பெயர், ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ என்ற கற்பனை நாவலால் ஈர்க்கப்பட்டது. ஹாபிட் என்பது எக்காளம் போன்ற இலைகளைக் கொண்ட ஒரு சதைப்பற்றுள்ள தாவரம் ஆகும். இலைகளின் வடிவம் காரணமாக இது, ‘ஹாபிட் விரல்கள்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஜன்னலின் மீது வைத்தால் நன்றாக வளரும். இது வளரும்போது ஒரு மரமாக தோன்றும்.
8. பிங்க் ஜேட்: இது கிராசுலா ஓவாடா, ‘பிங்க் பியூட்டி’என்றும் அழைக்கப்படுகிறது. நீள்வட்ட இலைகளைக் கொண்டுள்ளது. வெளிர் சிவப்பு நிறத்துடன்கூடிய அற்புதமான பூக்களால் அடிக்கடி கவனத்தை ஈர்க்கும் இதன் இலை அல்லது தண்டுகள் இனப்பெருக்கம் செய்யப் பயன்படும்.