Biomass ஆற்றல் என்றால் என்ன தெரியுமா?.. இதுதான் நம் பூமியின் எதிர்காலம்! 

Biomass sustainable energy and fuel
Biomass sustainable energy and fuel

பயோமாஸ் ஆற்றல் என்பது தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிருந்து பெறப்படும் கரிம பொருட்களை குறிக்கிறது. இதில் விவசாய எச்சங்கள், வனக்கழிவுகள், கரிமக் கழிவுகள் போன்ற அனைத்துமே அடங்கும். எரித்தல் வாய்வாக்கள் மற்றும் நொதித்தல் போன்ற பல்வேறு செயல்முறைகளை பயன்படுத்தி உயிரியல் பொருட்களை ஆற்றல் மற்றும் எரிபொருளாக மாற்றலாம். 

இவை மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பூமிக்கு அடியில் சேமிக்கப்பட்ட புதைப்படிவ எரிபொருட்களைப் போலல்லாமல், கார்பன் நடுநிலையாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் இவற்றை எரிக்கும்போது வெளியிடப்படும் கார்பன், ஒளிச்சேர்க்கையின்போது மீண்டும் தாவரங்களாலேயே உறிஞ்சப்படுகிறது.

பயோமாஸ் ஆற்றலின் நன்மைகள்: 

பயோமாஸ் வளமானது என்றும் நீடித்திருக்கும் ஒரு வளமாகும். புதைப்படிப்பு எரிபொருட்களைப் போலல்லாமல், முறையான மேலாண்மை மற்றும் கழிவு மறுசுழற்சி மூலமாக, பயோமாஸ் ஆற்றலைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்க முடியும்.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருக்களுடன் ஒப்பிடும்போது, பயோமாஸ் ஆற்றல் குறைந்த அளவிலான கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியிடுகிறது. இதில் மீத்தேன் சிதைந்து வெளியாகும் கரிம கழிவுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், பயோமாஸ் ஆற்றலானது காலநிலை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. 

இதன் மூலமாக புதைப்படிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கலாம். குறிப்பாக கிராமப்புறங்களில் பொருளாதார வாய்ப்புகளை வழங்குகிறது. ஏனெனில் இதற்கான பயோமெஸ் தீவனங்கள் உள்நாட்டிலேயே கிடைப்பதால், விவசாயிகளும் பயன்பெறுவார்கள் இத்துடன் நமது நாட்டிலேயே அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். 

பயோமாஸ் ஆற்றல் அமைப்புகள் கார்பன் கழிவுகளை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையை வழங்குகின்றன. விவசாயக் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் வனக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுவதன் மூலம், நிலக்கழிவுகள் பெரும்பாலும் குறைக்கப்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
நீங்கள் ஆற்றல் வாய்ந்த மனிதர்களாக இருக்க வேண்டுமா? இந்த ஏழு பழக்கங்களைப் பின்பற்றுங்கள்!
Biomass sustainable energy and fuel

சவால்கள்: 

இப்படி பல நன்மைகளை பயோமாஸ் ஆற்றல் பயன்படுத்துவதால் நாம் பெற முடியும். இருப்பினும் இதில் சில சவாலான விஷயங்கள் உள்ளது. பயோமாஸ் உற்பத்திக்கு நிலம், நீர் மற்றும் பிற இயற்கை வளங்களை நம் கவனமாக மேலாண்மை செய்ய வேண்டும். இல்லையெனில் அவை எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தலாம். 

இது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெறுகிறது என்பதால், பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இத்திட்டத்தை மேலும் வளப்படுத்தத் தேவைப்படுகிறது. இத்துடன் பயோமாஸ் உற்பத்திக்கு நாம் திட்டமிடும் நிலத்தை முறையாக தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் அந்த நிலத்தையே பாழாக்கிவிடும். 

இப்படி பல ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில்தான் பயோமாஸ் ஆற்றல் என்பது இயங்கிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இதில் குறைகளை விட நிறைகளே அதிகம் இருப்பதால், எதிர்காலத்தில் இத்தகைய ஆற்றல் உற்பத்தி, நமது சுற்றுச்சூழலுக்கும் நமக்கும் பெருமளவில் உதவும் என நம்புவோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com