கார்களை மறுசுழற்சி செய்யும் BMW!

BMW recycles cars.
BMW recycles cars.

கார்களை மறுசுழற்சி செய்ய தீவிர நடவடிக்கையை முன்னெடுக்க தொடங்கி இருக்கும் பி எம் டபிள்யூ நிறுவனம்.

ஜெர்மன் எப்பொழுதும் மறு சுழற்சி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள நாடு. இதனாலேயே ஜெர்மனிய மக்களும் 300 கிலோ கிராம் வரை தாங்களாகவே மறுசுழற்சி செய்ய தீவிர முயற்சியை மேற்கொள்ளின்றனர். இதனால் இயந்திர குப்பைகள் குறைந்து இயற்கை பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜெர்மனிய நிறுவனமான பிஎம்டபிள்யூ தற்போது முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட்ட கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியிருக்கிறது.

இந்த நடவடிக்கை இயந்திர குப்பைகளை குறைப்பதற்காகவும் உலகின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பே பிஎம்டபிள்யூ நிறுவனம் கார்களின் பாகங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் மின்சார வகை கார்கள் உற்பத்தியில் புதிய முன்னேற்றத்தை தொடங்கி இருக்கிறது. இதனுடைய நோக்கம் ஒரு வாகனம் தன்னுடைய பயண காலத்தில் வெளிப்படுத்தும் கார்பனின் அளவை 40 சதவீதம் வரை குறைக்கும் முயற்சி என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தினுடைய இந்த முயற்சி வெற்றி பெரும்பட்சத்தில் உலகம் முழுவதும் கார்களால் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு பெரும் அளவில் குறையும். இதனால் இயற்கை பெருமளவில் பாதுகாக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com