உடல் முழுதும் ரத்தினங்கள்; இயற்கையின் அதிசய உயிரினம்!

Strawberry Squid
Strawberry Squid

முற்றிலும் இயற்கையால் உருவாக்கப்பட்ட இந்த உலகம் மிகவும் விசித்திரமானது. நாம் அறியாத பல அபூர்வ உயிரினங்கள் இந்த உலகில் அதிகம் நிறைந்துள்ளன. இத்தகைய உயிரினங்களின் தன்மைகளைப் பற்றி நாம் அறியும்போது, நிச்சயம் மனதில் உற்சாகம் அடைவோம். அப்படிப்பட்ட விசித்திர உயிரினம் பற்றிதான் நாம் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.

பல விசித்திர உயிரினங்கள் நிலத்தில் வாழ்வது மட்டுமல்லாமல், கடலிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. அதன் காரணமாகவே அவற்றைப் பற்றி நாம் அறியும்போதெல்லாம் மிகுந்த ஆச்சரியத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட உயிரினத்தின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் அதிகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்தால் ஆச்சரியப்படாத நபர்களே இருக்க முடியாது.

அதுதான், 'ஸ்டாபெரி ஸ்குவிட்' எனப்படும் ஒரு கடல்வாழ் உயிரினம். அதன் உடல் பார்ப்பதற்கு ரத்தினங்களை பொருத்தியது போல ஜொலி ஜொலிக்கும். இதன் உடலில் தங்கம், நீளம், சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் ரத்தினங்கள் ஒட்டி இருப்பது போல மினுமினுக்கும். மேலும், இதன் உடல் வடிவம் பார்ப்பதற்கு ஸ்ட்ராபெரி போல இருப்பதால் இதை, ‘ஸ்ட்ராபெரி ஸ்குவிட்’ என்றே அழைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கடலை சுத்திகரிக்கும் சிப்பிகள்!
Strawberry Squid

இதைப் பற்றி தெரியாதவர்கள் திடீரென இதைப் பார்த்தால் கடலில் ரத்தினங்களும் வைரங்களும் நீந்திச் செல்கின்றன என்று தவறாகவே நினைப்பார்கள். அந்த அளவுக்கு கண்ணைப் பறிக்கும் அழகில் இந்த ஸ்குவிட் தென்படும். என்னதான் இது அழகான உயிரினமாக இருந்தாலும் இது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1913ல் முதல் முறையாக பெர்ரி என்பவரால் இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு விஞ்ஞானிகள் சேவல் கண்கள் கொண்ட கணவாய் என மற்றொரு பெயரையும் வைத்துள்ளனர்.

இந்தக் கணவாயில் இடது கண் வலது கண்ணை விட இரு மடங்கு பெரியதாக, பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். தரையின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் வாழும் இந்த ஸ்ட்ராபெரி ஸ்குவிட் உண்மையிலேயே இயற்கையின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com