கோவையில் உருவாகும் வண்ணத்துப்பூச்சி பூங்கா!

Butterfly park in Coimbatore!
Butterfly park in Coimbatore!https://www.hindutamil.in

ண்ணத்துப்பூச்சிகளை பாதுகாக்க திருச்சி, ஸ்ரீரங்கத்தை போன்று உருவாக உள்ளது கோவை வண்ணத்துப்பூச்சி பூங்கா. கோவை மாவட்டம், வாளையாறு தொடங்கி சிறுமுகை வரை உள்ள பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியாகும். இந்த பகுதியில் காட்டு யானை, காட்டு மாடுகள், புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளும் பல்லாயிரக்கணக்கான பூச்சி வகைகளும் வசிக்கின்றன. அவற்றில் முக்கியமானவை வண்ணத்துப்பூச்சிகள்.

இங்கு நூற்றுக்கணக்கான வகைகளில் வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன. இவை தங்கள் பாதுகாப்புக்காக மழை இல்லாத பகுதிகளை நோக்கி படையெடுக்கும். இவ்வாறு ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி வனப் பகுதியில் இருக்கும். அதன் பிறகு அக்டோபர் மாதம் தொடங்கி, பிப்ரவரி வரை இவை கோவை வனப் பகுதிக்கு வரும். இவ்வாறு இடப்பெயர்ச்சி மற்றும் இனப்பெருக்க செயல்பாட்டை வண்ணத்துப்பூச்சிகள் மேற்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கோவை மாவட்ட வனப்பகுதிக்குள் அதிக அளவிலான வண்ணத்துப்பூச்சி வகைகள் வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் கோவை நகரின் முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வெள்ளலூர் குளத்தில் தயாராகி உருவாகி வருகிறது. இது நொய்யல் நதி அமைப்பில் உள்ள அரை நகர்ப்புற நீர் நிலையாகும். இது பல்வேறு பறவைகள் மற்றும் பூச்சிகளின் இருப்பிடமாக உள்ளது. தற்போது பூங்காவின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்து உள்ளன.

இதையும் படியுங்கள்:
பூமியில் உருவாகும் புதிய கடல்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!
Butterfly park in Coimbatore!

வண்ணத்துப்பூச்சி பூங்காவின் இரண்டாம் கட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட உள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் நூற்றுக்கணக்கான இனங்களைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் வளர்க்கப்படவுள்ளதாகத் தெரிகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com