வீட்டிற்கு முன் புங்கை மரம் வளர்க்கலாமா?

Pungai tree
Published on

நம்மில் பலருக்கும் சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு நாம் கட்டும் வீட்டை சுற்றி தோட்டம் அமைத்து, செடிகள், மரங்கள் வளர்த்து, இயற்கையான சூழலில் வாழ வேண்டும் என்ற கனவு எல்லோரிடத்திலும் இருக்கும். நாம் கட்டும் வீட்டை ஏதோ சாதாரணமாக கட்டிவிட மாட்டோம். அதற்கு வாஸ்து பார்த்து, எந்த அமைப்பில் கட்டலாம் என ஒன்றுக்கு நூறு முறை யோசித்து தான் கட்டுவோம்.

இவ்வாறு நாம் கட்டிய வீட்டில் நமக்கு பிடித்தவாறு பல பொருட்களை வாங்கி வைத்து அழகு பார்ப்போம். மேலும் செடி, கொடி, மரங்கள் வளர்த்தாலும் அது வாஸ்துபடி நல்லவையா? என ஆராய்ந்து வளர்ப்போம்.

அந்தவகையில் முன்பெல்லாம் வீட்டிற்கு முன்பு கட்டாயம் ஒரு மரம் இருக்கும். அப்படி வீட்டின் முன் இருக்கும் மரத்தில் புங்கை மரம் நிச்சயம் இடம் பெறும். வீட்டின் முன் புங்கை மரம் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

புங்கை மரம்:

மில்லெட்டியா பின்னாட்டா எனப்படும் புங்கை மரம், அதிகமாக இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. புங்கை மரம் புங்கு மரம், கிரஞ்ச மரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்த மரத்தை Indian Beech Tree என கூறுவார்கள்.

குறுகிய காலத்தில் சீக்கிரம் வளரக்கூடிய மரமாக இந்த புங்கை மரம் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புங்கை மரம் அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது.

இந்த மரத்தை கிளைகளை வெட்டி நடலாம். அல்லது முற்றிய விதைகளை மண்ணில் புதைத்து வளர்க்கலாம். விதைகள் மூலம் மரம் வளர்க்க நினைத்தால் 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் கிளையை வெட்டி  நடவு செய்வதால் சில மாதங்களிலேயே வளர ஆரம்பித்துவிடும்.

இதையும் படியுங்கள்:
நெருப்பின்றி முளைக்காத செடி பற்றி தெரியுமா? வித்தியாசமான 5 செடிகளைத் தெரிந்து கொள்ளலாம்!
Pungai tree

வீட்டின் முன் புங்கை மரம் வளர்க்கலாமா?

  • வீட்டின் முன்பு கட்டாயம் புங்கை மரம் வளர்க்கலாம். ஏனென்றால் புங்கை மரம் காற்றில் உள்ள நச்சுகளை உறிஞ்சி, அதாவது CO2-வை எடுத்துக்கொண்டு சுத்தமான ஆக்ஸிஜனை கொடுக்கிறது. இதனால் சுத்தமான காற்றை சுவாசிக்க, இந்த புங்கை மரத்தை வீட்டின் முன் கட்டாயம் வளர்க்கலாம்.

  • மேலும் நாம் சோர்வாக இருக்கும் போது இந்த புங்கை மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால், உடல் சோர்வு நீங்கி சிறிது நேரத்தில் புத்துணர்வு கிடைக்கும். 

  • மேலும் மருத்துவ குணம் கொண்ட மரம் என்பதால், இந்த மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

  • மூங்கில் மரத்திற்கு பிறகு, புங்கை மரம் தான் அதிக அளவிலான ஆக்ஸிஜனை கொடுக்கிறது. எனவே தான் இந்த மரங்களை பள்ளிக்கூடங்களிலும், வீட்டின் முன்பு, சாலை ஓரங்களிலும் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

  • இந்த புங்கை மரம் புவி வெப்பமடைதலில் இருந்து தடுக்கிறது. எனவே கோடைக்காலங்களில் நிழல் தரும் சிறந்த மரமாக புங்கை மரம் பார்க்கப்படுகிறது.

  • இந்த மரத்தை வீட்டின் அருகில் வளர்ப்பதால் எந்தவித தீமையும் ஏற்படாது. காரணம் இந்த மரம் புயல், மழைக்காலங்களில் வீட்டிற்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மண் அரிப்பை தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com