விளைச்சலைத் தடுக்கும் பூனைவால் கோரைப்புல்: விவசாயிகள் வேதனை!

விளைச்சலைத் தடுக்கும் பூனைவால் கோரைப்புல்: விவசாயிகள் வேதனை!

மிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அதிகரித்து வரும் பூனை வால் கோரைப் புல்லின் அதிக விளைச்சலால் மற்ற வகைப் பயிர் வகைகள் விளைய முடியாமல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பூனைவால் கோரைப்புல் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஆற்றுத் தண்ணீரில் அடித்து வரப்பட்ட பூனைவால் கோரைப் புல் விதைகள் பெரிய அளவில் விளைநிலங்களில் புதைந்து தற்போது 4 அடி முதல் 5 அடி வரை வளர்ந்து இருக்கின்றன. இந்த வகை கோரைப் புல் வளரும் இடங்களில் வேறு வகையான பயிர்கள் வளர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், மண்ணினுடைய அனைத்து சத்துக்களையும் இந்த வகை கோரைப் புல் எடுத்துக் கொள்வதால் மற்ற வகை பயிர்களுக்கு சத்து கிடைக்காமல் வளர்ச்சி தடைபடுகிறது.

ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து இந்த கோரைப் புல்லை அழித்தாலும், தீயிட்டு கொளுத்தினாலும் மீண்டும் மீண்டும் இந்தக் கோரைப் புல் வளர்ந்து வருகிறது. கம்பு பயிர் போலக் காட்சியளிக்கும் இந்த பூனைவால் கோரைப் புல்லில் இருந்து வெளிவரும் பஞ்சு காற்றில் பரவி விளைநிலங்களில் புதைந்து பெரிய அளவில் வளரத் தொடங்குகின்றன. இதனால் காற்றடிக்கும் திசை எங்கும் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. மேலும், கோரைப் புல்லில் இருந்து வெளிவரும் பஞ்சு உடல் உறுப்புகளில் பட்டவுடன் அரிப்பை ஏற்படுத்துவதுடன், கண்களில் பட்டால் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது.

விவசாயிகள் போதிய அளவு மழை இல்லாமலும், அதிக அளவிலான வெயில் காரணமாகவும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த நேரத்தில் பூனை வால் கோரைப் புல் பாதிப்பு வட மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com