அண்டார்டிகாவை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா?

China trying to invade Antarctica.
China trying to invade Antarctica.
Published on

அண்டார்டிகாவை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

பூமியின் மிகப்பெரிய பனிப்பகுதி அண்டார்டிகாவாகும். இங்கு உலகில் உள்ள மூன்றில் ஒரு சதவீத நன்னீர் இருப்பதாகவும், 500 பில்லியன் டன் இயற்கை வாயுக்கள் இருப்பதாகவும், 500 பில்லியன் டன் கட்சா எண்ணெய் இருப்பதாகவும், மேலும் உரைந்து இருக்கும் பனிகளில் நிலக்கரி, இயற்கை தாதுக்கள், வைரம், தங்கம் போன்ற பல்வேறு வகையான விலை உயர்ந்த தாதுக்கள் இருக்கக்கூடும் என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அண்டார்டிகாவை ஆக்கிரமிக்கும் முயற்சி 2ம் உலகப்போருக்கு அதிகரித்தது. இதனால் அண்டார்டிகாவை பாதுகாக்க 1959 ஆம் ஆண்டு அண்டார்டிகா ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் அறிவியல் மற்றும் அமைதியை கொண்டு அண்டார்டிகாவை அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆயுத பயன்பாடு மற்றும் வேட்டையாடுதல், ஆக்கிரமித்தல், நிரந்தர குடியேற்றம் ஆகியவை அண்டார்டிகாவில் தடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் அறிவியல் முன்னேற்றத்திற்காக நாடுகள் தங்கள் ஆய்வு மையத்தை அமைத்துக் கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்பொழுது அண்டார்டிகாவை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளினுடைய பாதுகாப்புத் தன்மை குறைந்து இருப்பதாகவும், கடல் வாழ் உயிரினங்கள் வேட்டையாடப்படுவது அதிகரிப்பதாகவும், இது சீனா நிறுவனங்கள் செய்யும் செயல் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இதனால் அண்டார்டிகா கடலை சுற்றியுள்ள 40 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு கூடுதலாக பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றன. ஆனால் சீனா இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இதையும் படியுங்கள்:
காலநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க பொருளாதார ரீதியாக உதவும் இந்தியா, சீனா!
China trying to invade Antarctica.

இது சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியுடைய வெளிப்பாடு என்று அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கன்னடா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. அதே சமயம் அர்ஜென்டினா, சிலி, நார்வே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அண்டார்டிகாவினுடைய குறிப்பிட்ட பகுதிகளுக்கு உரிமை கொண்டாடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com