பசிபிக் கடலில் ஏற்பட போகும் சூப்பர் எல் நினோ காரணமாக பூமியினுடைய கால நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும், இது இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் வறட்சி ஏற்பட காரணமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் வானிலை நிலவரம் எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. இவற்றை ஆய்வு செய்து பூமியில் காலநிலை பாதிப்பு ஏற்படும் மற்றும் பூமியின் இயல்பு பாதிக்கப்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் பெருங்கடல் பகுதியில் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை காலமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் 70 முதல் 75 சதவீதம் வரை வெப்பம் உயரும். இவ்வாறு பூமத்திய ரேகை பகுதியில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து காணப்படும். இது சூப்பர் எல் நானோ என்று அழைக்கப்படுகிறது.
எப்பொழுதும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். ஆனால் 2024 கோடை காலம் மிக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால் காற்றின் தன்மையில் மாற்றம் ஏற்படும், மழை பொழிவில் மாற்றம் ஏற்படும், இது உலகம் முழுவதும் பாதிப்பை உண்டாக்கும். இதனால் ஏற்படும் திசை மாற்றத்தின் காரணமாக இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் கடுமையான வளர்ச்சியை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இதன் மூலம் உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.