சூறாவளி தாக்கமும் அதன் விளைவுகளும்!

Cyclone
Cyclone
Published on

வ்வொரு வருடமும் மழைக்காலம் வந்துவிட்டால் பல்வேறு விதமான சூறாவளிகள் நம்மைத் தாக்க ஆரம்பித்து விடும். அதற்கு வைக்கப்படும் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். ‘எப்படி இதற்குப் பெயர் வைக்கிறார்கள்’ என்று நினைப்போம். உலகம் முழுவதும் தாக்கும் சூறாவளிகளுக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

காற்றின் அழுத்தம் கடலில் ஓரிடத்தில் மிகவும் குறைந்த அளவு இருக்கும்போது, அதை சரி செய்ய காற்றானது அதிக அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதிக்குச் செல்கின்றது. அப்பொழுது உயரமான அலைகளும் அதிகமான காற்றும் ஏற்படுகின்றன. 180 முதல் 400 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசுவதுடன் கடுமையான மழையும் பெய்கிறது. அதன் அழுத்தத்திற்கு தக்கவாறு சூறாவளியின் அளவு கூடியோ குறைந்தோ காணப்படுகிறது.

இப்படி ஏற்படும் காற்றை அமெரிக்காவில் ஹரிக்கேன் என்றும், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் டைகூன்ஸ் என்றும் பங்களாதேஷ் மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சைக்ளோன் என்றும் ஆஸ்திரேலியாவில் வில்லி வில்லி என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

வெப்ப மண்டல பகுதி சார்ந்த சூறாவளிகள் பல உயிர்கள் மற்றும் உடைமைகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கின்றன. ரயில், சாலை, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் முற்றிலுமாக பாதிக்கப்படுகின்றன. வேளாண் பயிர்கள், வீடு மற்றும் வனவிலங்குகள் அழிவுக்கு உள்ளாகின்றன. மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாவதுடன் தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சாகா வரம் பெற்ற எட்டு சிரஞ்சீவிகள் யார் தெரியுமா?
Cyclone

மீன்பிடித் தொழில் முற்றிலும் நின்று விடுவதால் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வயல்வெளிகளில் உள்ள மண்ணும் நீரும் உவராகி விடுகின்றன. பொதுவாக, எல்லா மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி விடுகிறது. கடற்கரைக்கு அறிகிலுள்ள மீனவக் குடியிருப்புகள் அடித்து செல்லப்படுவதுடன் நீர்வாழ் உயிரின தொகுப்புகளும் சிதையுறுகின்றன.

2005ம் ஆண்டில் அமெரிக்காவை ஐந்து முறை சூறாவளி தாக்கி மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது .2005 - 2006ல் இந்தியாவை இருமுறை தாக்கிய சூறாவளியால் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டன.

இதைத் தடுப்பதற்கு நம்மால் முடிந்த காரியம் என்று பார்க்கப்போனால் கடற்கரை ஓரங்களில் மரங்களை வளர்க்கலாம். அதனால் அவை புயல் காற்றைத் தாங்கிக் கொள்ளும். அப்படித் தாங்கிக்கொள்வதால் கடற்கரையோர கிராமங்களில் உள்ள குடியிருப்புகளும் மீனவர்களும் எதிர்கொள்ளும் பாதிப்பும் தாக்கமும் பெரிதும் குறையும். அதேபோல், கடற்கரை அருகில் அதன் இயற்கையழகை ரசித்தபடி வாழ்வதற்கு வீடுகள் கட்டுவதைத் தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com