ஆணாக இருந்து பெண்ணாக மாறும் இறால் மீன்கள் பற்றி தெரியுமா?

lobster fish
lobster fish
Published on

ங்கிலத்தில் லாப்ஸ்டர்கள் என அழைக்கப்படும் கடல் நண்டுகளுக்கு இறால்கள் என்றும் பெயர் உண்டு. இறால்களைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.

வாழ்விடம்: இறால்கள் பூமியில் உள்ள பழைமையான உயிரினங்களில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் உண்ணப்படுகின்றன. கடந்த காலத்தில் அவை ஏழைகளின் உணவாக இருந்தன. இப்போது ஆடம்பர உணவுப் பொருளாக மாறிவிட்டன. பெரும்பாலான இறால்கள் உப்பு நீரில் வாழும். சில வகையான இறால்கள் நன்னீர ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழும். இவை பத்தடி ஆழம் உள்ள வளைகளில் வாழ்கின்றன. இவற்றால் குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள நீரிலும் வாழ முடியும்.

ஆயுட்காலம்: இறால்கள் நூறு ஆண்டுகள் வரை வாழ்கின்றன. வனப்பகுதியில் வாழும் இறால்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இறால்கள் நிலத்தில் மிக மெதுவாக நகரும் தன்மை உடையன. ஆனால், தண்ணீரில் மிக வேகமாக நீந்தும்.

கீல்வாதம் உட்பட பல்வேறு நோய்களுக்கு இறால்கள் மருந்தாகப் பயன்படுகின்றன. அதனாலும், உணவுக்காகவும் இவை அடிக்கடி கொல்லப்படுகின்றன. மற்ற கடல் உணவுகளுடன் ஒப்பிடும்போது இறால்களில் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக உள்ளது. எனவே, இது மக்களின் விருப்பத்தேர்வு உணவாக உள்ளது.

உடலமைப்பு: இறால்களின் உடல் மூன்று பகுதிகளால் ஆனது. கடினமான வெளிப்புற ஓடு, மென்மையான உடல் மற்றும் ஒரு ஜோடி நகங்கள். தண்ணீரில் நீந்தவும் தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் தனித்துவமான வாலை கொண்டுள்ளன. நான்கு அடி நீளம் வரை கூட இவை வளரக்கூடியவை.

இறால்களுக்கு கண்கள் இல்லை. கண் புள்ளிகள் எனப்படும் சிறிய ஒளி உணர்திறன் உறுப்புகளை மட்டுமே கொண்டுள்ளன. அவற்றால் ஒளி மற்றும் இருளை கண்டறிய பயன்படுத்துகின்றன. மனிதர்களைப் போல பார்க்கும் திறன் அவற்றுக்கு இல்லை. இறால்கள் மிக நன்றாக நீச்சல் அடிக்கக்கூடியவை. இவற்றால் பின்னோக்கியும் நீந்த முடியும் என்பது சிறப்பு.

பாலினத்தை மாற்றும்: ஆணாக இருக்கும் சில வகை இறால்கள் பெண்ணாக மாற முடியும். அல்லது பெண்ணாக இருப்பவை ஆணாக மாற முடியும். இது சீக்வென்ஷியல்  ஹெர்மாஃபுரோடிடிசம் என்று அழைக்கப்படுகிறது. ஆணாக இருக்கும் இறால்கள் தங்கள் குழுவை வழிநடத்துகின்றன.

இவை ஒலிகள் வாசனைகள் மற்றும் உடல்மொழி ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன. தங்கள் நகங்களைப் பயன்படுத்தி செய்திகளைப் பரப்புகின்றன.

இதையும் படியுங்கள்:
உறவு இணைப்புப் பாலமாகத் திகழ்ந்த தபால் கார்டுகள்!
lobster fish

நீல நிற இரத்தம்: இறால்களின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இவற்றின் இரத்தத்தில் தனித்துவமான நீல நிற ஹீமோசயனின் உள்ளது. இது அவற்றின் உடல் முழுக்க ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. மனிதனுடைய சிவப்பு நிற ஹீமோகுளோபினிலிருந்து வேறுபட்டது.

நிறம் மாறும் வித்தகன்: இறால்கள் குரோமோடோபோர்ஸ் எனப்படும் சிறப்பு செல்களைக் கொண்டுள்ளன. அதனால் இவை தங்கள் ஓடுகளின் நிறத்தை மாற்றும் வல்லமை கொண்டவை. தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ள அல்லது இரையை பதுங்கி இருந்து தாக்க தங்களுடைய ஓடுகளின் நிறத்தை சுற்றுப்புறத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கிறது. மேலும், இறால் கூட்டத்திலேயே அவற்றைப் பாதுகாக்கும் ஒரு சிறப்பு காவலர் இறாலும் உள்ளது.

இறங்கும் தட்டு: இறால்களுக்கு ஒரு சிறப்பு லேண்டிங் ஸ்பாட் உள்ளது. ஓடுகளை உதிர்த்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்களைப் பதுக்கிக்கொள்கின்றன. அந்த இடம் இறங்கும் தட்டு என்று அழைக்கப்படுகிறது. அவை தங்கள் நகங்களை இழந்தால் மீண்டும் அவற்றை வளர்த்துக்கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com