கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Black Apple
Black Apple
Published on

ப்ளேக் டயமண்ட் ஆப்பிள்கள் என்று அழைக்கப்படும் இவை கருப்பு நிறத்தில் இருக்கும். ஹூவா நியு ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஆப்பிள் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

 நாம் சிவப்பு ஆப்பிள்களைப் பார்த்திருப்போம், சாப்பிட்டிருப்போம். அது என்ன கருப்பு ஆப்பிள்? இது சாப்பிடக்கூடியதா? எங்கு கிடைக்கும்? போன்ற கேள்விகளுக்கு பதல்கள் இங்கே...

இந்த வகையான ஆப்பிள்கள் திபெத்திய பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக திபெத்தின் மலைகளில் உள்ள ஒரு சிறிய நகரமான Nyingchi இல் வளர்க்கப்படுகின்றன.

ஏன் இங்கு வளரும் ஆப்பிள்கள் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கிறது என்றால், இப்பகுதியில் மட்டும் பகலில் அதிகப்படியான புற ஊதா ஒளியைப் பெறுகிறது. பகல் மற்றும் இரவில் அதிகப்படியான வெப்பநிலை மாறுகிறது. இவை ஆப்பிளின் தோலை பாதிக்கிறது மற்றும் கருமையான நிறத்தை உருவாக்குகிறது. தோல் கருமையாக மாறும் போது, ​​​​உள்ளே உள்ள சதை மட்டும் அப்படியே மற்ற ஆப்பிளைப் போலவே வெண்மையாக இருக்கும்.

பலர் இதனை பயிரிடுவதில்லை என்பதால், அவ்வளவாக விற்கப்படுவதில்லை. குறிப்பாக இந்த வகை ஆப்பிள்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே காய்க்கும். அறுவடை செய்ய 8 மாதங்கள் ஆகிவிடும். சாதாரண ஆப்பிளில் இருக்கும் சத்துக்கள் போல இவற்றில் இல்லை. சாதாரண ஆப்பிளில் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் எபிகாடெசின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:
மிகவும் விலையுயர்ந்த அக்வாரியம் வகை மீன்கள்!
Black Apple

ஆனால், இவற்றில் அத்தகைய பண்புகள் இல்லை. இதன் விலை மிகவும் அதிகம். ஒவ்வொரு ஆப்பிளும் $7- $20 வரையாகும். ஆகையால், ஒருவருக்கு இவ்வளவுதான் விற்கவேண்டும் என்று நிர்ணயம் செய்திருப்பார்கள். திபெத் தவிர சீனாவிலும் ஒருசில இடங்களில் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இதில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை மிகவும் குறைவே. ஆனால் இதன் தோலில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

விலையும் அதிகம், சத்தும் குறைவு… இப்படியிருக்கும்போது பார்த்து வியக்க மட்டுமே தூண்டும் பழங்களில் ஒன்றுதான் இந்த கருப்பு ஆப்பிள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com