தேனீக்களின் விசித்திர வாழ்க்கை முறை பற்றி தெரியுமா?

Honeycomb
Honeycombhttp://riyadhtntj.net

ண்டார்டிகா தவிர, அனைத்து கண்டங்களிலும் காணப்படும் சிறு பூச்சி இனம் தேனீக்கள். இவற்றால்தான் தாவரங்களில் மகரந்த சேர்க்கை உருவாகி தாவர இனங்கள் பெருகுகின்றன.தேனீக்கள் கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் முப்பதாயிரம் முதல் 40,000 வரை தேனீக்கள் இருக்கும்.

ஒரு குழுவில் ஒரு ராணித் தேனீ, நூற்றுக்கணக்கில் ஆண் தேனீ மற்றும் வேலைக்காரத் தேனீ என மூன்று வகைகள் உண்டு. ஒரு தேன் கூடு ஒரு வருடத்தில் சராசரியாக 30 முதல் 100 பவுண்டுகள் வரை தேனை உருவாக்கும். இதற்கு 800 தேனீக்களின் கூட்டு பங்களிப்பு தேவைப்படுகிறது. ஆறு கால்கள் கொண்ட பறக்கும் பூச்சியான இவை பூவிலிருந்து தேனை உறிஞ்சி தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.

தேனீக்களுக்கு காதுகள் இல்லை. அவை சிறப்பு அசைவுகள் மூலம் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன. தேனீக்கள் தமது உடலில் இருந்து வெளியேற்றும் மெழுகால் அறுகோண அறைகள் கொண்ட கூடுகளை சிறந்த பொறியாளர்களைப் போல செயல்பட்டு அமைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க எளிய ஆலோசனைகள்!
Honeycomb

ராணி தேனீ இடும் முட்டையிலிருந்து வரும் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி எனப்படும் ஊட்டச்சத்து மிக்க திரவம் தரப்படுகிறது. இந்த திரவத்தைப் பெற்ற ஒரு தேனீ மட்டுமே நல்ல வளர்ச்சி பெற்று ராணி தேனீயாக மாறுகிறது. தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டவை. மேலும், இவை மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டவை.

ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இருந்தாலும் இவற்றிற்கிடையே எந்தவிதமான நிர்வாக கோளாறோ, குளறுபடிகளோ வருவதில்லை. தேனடைகள் விழுந்து விடாமல் இருக்க வேலைக்கார தேனீக்கள் மரக்கிளையில் பிசினைக் கொண்டு அவற்றுடன் சில நொதியங்களையும் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசினைப் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டுவதுடன் கூடுகளில் ஏற்படும் விரிசல்களையும் சரி செய்கின்றன. தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாகக் கூறுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com