காலாவதியான மருந்து மாத்திரைகளை முறையாக டிஸ்போஸ் செய்யும் வழிகள் தெரியுமா?

Expired medicine
Expired medicinehttps://manithan.com

பொதுவாக, எல்லோர் வீடுகளிலும் காலாவதியான மருந்து மாத்திரைகள், டானிக் பாட்டில்கள் இருக்கும். அவற்றை அப்படியே குப்பையில் தூக்கி எறிவதால் அது விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றை எப்படி முறையாக டிஸ்போஸ் செய்வது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மாத்திரைகள்: நிறைய வீடுகளில் தலைவலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரைகள், வயிற்று வலி மாத்திரைகள் என்று மெடிக்கல் ஷாப்பில் கேட்டு வாங்கி வந்தது மற்றும் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகள் என்று மீதமானவை வீட்டில் இருக்கும். அவற்றில் நிறைய எக்ஸ்பயரி ஆகி இருக்கும். காலாவதியான அவற்றை சாப்பிடுவது தவறு.

ஆனால், அப்படியே அவற்றை குப்பையில் தூக்கி எறிவதும் கூடாது. மாத்திரைகளை பொடியாக நுணுக்கி அவற்றை பயன்படுத்திய டீத் தூளுடன் கலந்து ஒரு பிளாஸ்டிக் பையில் இறுக்கமாகக் கட்டி குப்பையில் போடுவதுதான் சிறந்தது. இவற்றை நேரடியாக மண்ணில் வீசும்போது நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும். சுற்றுச்சூழலுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். மேலும், விலங்குகள் அதை சாப்பிட்டால் தீங்குகள் உண்டாகும்.

2. இருமல் மருந்து, டானிக்குகள்: பாதி தீர்ந்துபோன, காலாவதியான இருமல் மருந்து அல்லது கெட்டுப்போன இருமல் மருந்து என பாட்டிலில் மீதம் இருப்பதை டாய்லெட்டில் ஊற்றி ஃப்ளஷ் அவுட் செய்யலாம். அதேபோல பயன்படுத்தாத, காலாவதியான டானிக் பாட்டிலில் இருக்கும் டானிக்கையும் டாய்லெட்டில் ஊற்றி விடலாம்.

இதையும் படியுங்கள்:
நரசிம்மரை கட்டிவைத்த வேடனின் கதை தெரியுமா?
Expired medicine

3. ஊசி மற்றும் சிரிஞ்சுகள்: பயன்படுத்திய ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகளை முறையாக டிஸ்போஸ் செய்வது மிகவும் அவசியம். இவற்றை அப்படியே குப்பையில் வீசி எறிவது கூடாது. துப்புரவுத் தொழிலாளிகள் கையில் அவை குத்தி செப்டிக் ஆகலாம். குப்பையில் காகிதம் மற்றும் காலி பாட்டில்கள் சேகரிக்க வரும் மனிதர்களூக்கும் அபாயத்தை உண்டுபண்ணலாம். விலங்குகள் அவற்றால் காயம் பட நேரலாம்.

எனவே, ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகளை அதற்கென்றே இருக்கும் கூர்மையான கொள்கலனில் வைக்கவும். இந்த கொள்கலன்கள் ஊசிகள் போன்ற கூர்மையான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை நன்றாக பேக் செய்து குழந்தைகள் மற்றும் விலங்குகள் கையில் கிடைக்காதவாறு டிஸ்போஸ் செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் சுகாதார மையங்களில் அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துகிறார்கள் என கேட்டுத் தெரிந்து கொண்டு அதுபோல செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com