நறுமணத்துடன் சண்டையிடும் லெமூர்களின் குணாதிசயம் தெரியுமா?

அக்டோபர், 25 உலக லெமூர் (Lemur) தினம்
Scented fighting lemurs
Scented fighting lemurs
Published on

தோற்றத்தில் சிறியதாக, புசுபுசு வாலுடன் சுறுசுறுப்பான அசைவுகள் மூலம் அணில்களை நினைவூட்டுகின்றன லெமூர்கள். ஆனால், அணில்கள் கொறித்துண்ணிகள். லெமூர்கள் விலங்குகள். இவை மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் தீவுகளைத் தாயகமாகக் கொண்டவை. அகன்ற கண்களும் நீண்ட வாலும் விளையாட்டுத்தனமான இயல்பும் கொண்டவை.

லெமூர்களின் சிறப்பியல்புகள்:

பெரிய கண்கள்: லெமூர்களுக்கு பெரிய அகலமான வட்டக் கண்கள் உள்ளன. அவை அவற்றின் அழகான மற்றும் ஆச்சரியமான தோற்றத்தை மேம்படுத்துகின்றன. கார்ட்டூனில் வரும் கதாபாத்திரங்களை நினைவூட்டுவது போல இருக்கும் இவற்றின் கண்கள்.

குதிக்கும் திறன்: இவை அபாரமான குதிக்கும் திறனுக்கு பெயர் பெற்ற விலங்குகள். இவற்றின் உடல் நீளத்தை விட பத்து மடங்கு அதிகமாக குதிக்க முடியும். அதனால் அவற்றின் அசைவுகள் விளையாட்டுத்தனமாவும் வேடிக்கையாகவும் உல்லாசமாகவும் இருக்கும்.

நறுமணமுள்ள சண்டைகள்: ஆண் லெமூர்கள் பிற விலங்குகளுடன் சண்டையிடும்போது தங்கள் வாலில் வாசனையுள்ள பொருட்களை தேய்த்துக் கொள்ளும். இவை சண்டைகளை கூட நறுமணமுள்ள சண்டைகளாக மாற்றுகின்றன என்பது ஒரு வேடிக்கையான செயலாகும்.

மல்யுத்தம்: தங்கள் குழுவினர்களுக்குள் அடிக்கடி சண்டையிடுவது போல விளையாட்டுத்தனமான செயல்களில் ஈடுபடும். பல லெமூர்கள் சிறிய குழுக்களாக சேர்ந்து கொண்டு மல்யுத்தம் செய்து விளையாடுவார்கள் அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது பார்க்க நகைச்சுவையாக இருக்கும்.

தனித்துவமான குரல்கள்: இவை பலவிதமான ஒலிகளை எழுப்பக் கூடியவை. உரத்த அலறல் முதல் விசித்திரமான சப்தம் வரை இவர்களது குரல் ஒலிகள் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். நண்பர்கள் கலகலப்பாக உரையாடுவது போலவே இருக்கும் இவற்றின் ஒலிகள்.

வால்: இவற்றின் வால்கள் நீண்டு சுருண்டிருக்கும் அவை பெரும்பாலும் கேள்விக்குறியை போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கும். இவற்றின் அபிமானமான தோற்றத்திற்கு இந்த விசித்திரமான வால் மேலும் ஒரு தனித்துவத்தை சேர்க்கிறது.

நடனமும், விளையாட்டும்: பொதுவாக ஒவ்வொரு லெமூரும் தனித்துவமான ஆளுமைகளை வெளிப்படுத்துகின்றன. சில விலங்குகள் ஆர்வமாகவும் சாகச உணர்வுகளுடன் இருக்கும்போது பிற லெமூர்கள் எதுவும் செய்யாமல் ஓய்வெடுக்கின்றன. ஒரு குழுக்களுக்குள் அவர்களை கூட்டமாக பார்க்கும்போது விதவிதமான் வேடிக்கையான சமூக இயக்கவியலுக்கு வழிவகை செய்கிறது. விளையாட்டுத்தனமான நடன பாணியில் இவை அசைந்தாடுவது பார்க்கவே ரசிக்கும்படி இருக்கிறது.

குழந்தைகளைப் போல ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு விளையாடுவதும் உருண்டு விழுவதும் மனதைக் கவர்கிறது. இது திரைப்படங்களில் வரும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஒருவரை ஒருவர் துரத்தி அடித்துக் கொண்டு விளையாடுவது போல இருக்கும். பொதுவாக இவை மரங்களில் வாழ்வதை விரும்புகின்றன. மரங்களில் இலைகளின் ஊடே அசையும்போதும், கிளை விட்டு கிளை தாவும்போதும், பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
Over thinking உடம்புக்கு மட்டுமல்ல; மனதுக்கும் ஆகாது!
Scented fighting lemurs

உலக லெமூர் தினம்: இவ்வுலகில் மூன்று வகையான லெமூர்கள் உள்ளன. மோதிரவால் லெமூர், நீலக் கண்கள் கொண்ட கருப்பு லெமூர், கருப்பு வெள்ளை லெமூர் போன்றவை உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25ம் தேதி உலக லெமூர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சுவாரசியமான அழகான விலங்குகளை பத்திரமாக பார்த்துக்கொள்வது அவசியம் என்ற கருத்தை இந்த தினம் வலியுறுத்துகிறது.

இவை மகரந்தச் சேர்க்கை செய்பவைகளாகவும் விதைகளை பரப்புபவைகளாகவும் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு மகரந்தத்தை மாற்றவும் உதவுகின்றன. தாவரங்கள் இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன. பல்லுயிர் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com