அரிய வகை விலங்குகளான வொம்பாட்டுகளின் சிறப்பியல்புகள் தெரியுமா?

Wombats are rare animals
Wombats are rare animals
Published on

வொம்பாட்டுகள் (Wombat) ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட அழகான பாலூட்டிகள். இவை ஆஸ்திரேலிய மக்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு அன்பான விலங்காகும். அவற்றின் வேடிக்கையான சில பண்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நகைச்சுவையான உருவ அமைப்பு: இவை பெருச்சாளியைப் போன்ற உடலும் பன்றியின் முகத்தைப் போன்ற முகமும் கொண்டவை. அகன்ற மூக்கு மற்றும் எரிச்சலுடன் இருப்பதைப் போன்று தோற்றமும் பார்த்தவுடன் சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும். இவற்றின் ரோமங்களை பார்க்கும்போது சிறிய கோலார் கரடிகளை போலத் தோற்றமளிக்கும். இவற்றின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இரவு நேர விலங்குகள்: இவை இரவு நேர விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இரவில் மிகவும் சுறுசுறுப்பாக அலைந்து திரிந்து உணவைத் தேடுகின்றன. மனிதர்கள் தூங்கும் நேரத்தில் இவை உணவு வேட்டையில் இறங்குகின்றன.

வசிப்பிடம்: வொம்பாட்டுகளுக்கு கடினமான தோல் மற்றும் சக்தி வாய்ந்த நகங்கள் உள்ளன. இந்த கூரிய நகங்கள் மண்ணில் துளைகளைத் தோண்டுவதற்கு உதவியாக உள்ளன. இவற்றை பிற மிருகங்கள் துரத்தும்போது தாங்கள் தோண்டிய வளைகளுக்குள் சென்று ஒளிந்து கொள்கின்றன.

உணவுப் பழக்கம்: இவை பெரும்பாலும் வேர்கள் மற்றும் புற்களை உண்ணும். இவற்றின் உடலில் ஒரு சிறப்பு செரிமான அமைப்பு உள்ளது. இவற்றின் உணவு செரிமானமாக 14 நாட்கள் வரை ஆகும் என்பது விந்தையான ஒன்று.

ஒலிகள்: இவை அமைதியான இயல்புடன் இருந்தாலும் முணுமுணுப்புகள், உறுமல்கள் மற்றும் கூக்குரல்கள் போன்ற பல வேடிக்கையான சப்தங்களை எழுப்பும். அவை எரிச்சல் அடையும்போதும் எதிரிகளால் அச்சுறுத்தப்படும்போதும் இது போன்ற ஒலிகளை எழுப்புகின்றன.

மெதுவான இயக்கம்: இவை மெதுவாக இயங்கக் கூடியவை. இவற்றின் உடல் ரோமம் நிறைந்த சிறிய தொட்டியை போன்று இருக்கிறது. எனவே, எப்பொழுதும் மெதுவாகத்தான் இயங்கும். ஆனால், அதேசமயத்தில் மண்ணில் உள்ள குறுகிய வெடிப்புகளில் வேகமாக ஓட முடியும்.

வேகமாக ஓடும் திறன்: இவை மனிதர்களை விட மிக வேகமாக ஓடக்கூடியவை. மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. உசைன் போல்ட்டை விட மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகம் குறைவு. ஆனால், அவை அப்படிச் செய்வதில்லை.

கனசதுர வடிவ கழிவுகள்: பிற விலங்குகளைப் போல இல்லாமல் இவை கனசதுர வடிவத்தில் கழிவுகளை வெளியேற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஓயாத தலைப் பொடுகை ஒழித்துக்கட்ட சில இயற்கை ஆரோக்கிய வழிகள்!
Wombats are rare animals

வலுவான வாசனை உணர்வு: இவை மிகவும் வலுவான வாசனை உணர்வை கொண்டுள்ளன. அவை உணவைக் கண்டுபிடிக்கவும் தங்களை வேட்டையாடுபவர்களைக் கண்டறியவும் பயன்படுகின்றன. இந்த வாசனை உணர்வின் மூலம் பிற வொம்பாட்டுகளை அடையாளம் காண உதவுகின்றன மற்றும் சிக்கலான சமூகத் தொடர்புகளுக்கு செல்ல அனுமதிக்கின்றன.

பெரும்பாலான வொம்பாட்டுகள் பொதுவாக பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். சில கருப்பு, கிரீம் அல்லது இஞ்சி நிற ரோமங்களைக் கொண்டிருக்கின்றன. இவை தாவரங்களுடன் மறைந்திருக்கையில் இவற்றை கண்டுபிடிக்க முடியாது.

அழிவின் விளிம்பில்: இவற்றின் ரோமங்கள் மிகவும் அடர்த்தியாகவும் மென்மையாகவும் இருப்பதால் குளிர்காலத்தில் அணிந்துகொள்ள வசதியான ஸ்வட்டர்கள் தயாரிக்க இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் வேகமாக அழிந்து வரும் அரிய விலங்குகளின் பட்டியலில் இவை உள்ளன. எனவே, இவை பாதுகாக்கப்பட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com