கரடி போல் தோன்றினாலும் கரடி அல்லாத இந்த விலங்கின் வேடிக்கை செயல்கள் தெரியுமா?

Koala bears
Koala bears
Published on

பார்ப்பதற்கு கரடிகள் போலத் தோன்றினாலும், கரடிகளைப் போன்ற உடலமைப்பு கொண்டிருந்தாலும் கோலாக்கள் கரடிகள் அல்ல. அவை உண்மையில் மார்சுபியல்கள். அதாவது அவை வளர்ச்சியடையாத குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒரு வகை பாலூட்டிகளாகும். குட்டிகள் சிறியதாகப் பிறந்து பின்னர் வளர்ந்து முடிப்பதற்கு அம்மாவின் பை வரை ஊர்ந்து செல்கின்றன. பின்னர் அவை தாயின் வயிற்றில் வளர்ச்சியை நிறைவு செய்கின்றன.

சோம்பேறி விலங்குகள்: உலகின் சோம்பேறி விலங்குகள் என்று அழைக்கப்படுபவை கோலாக்கள். இவை கிட்டத்தட்ட நாள் முழுதும் தூங்குகின்றன. தூக்கத்தின் மீது பெரும் காதல் கொண்டுள்ள இந்த விலங்குகள் ஒரு நாளின் 22 மணி நேரத்தை தூங்கிக் கழிக்கின்றன.

தனித்துவமான ஒலிகள்: கோலக்கள் கரடுமுரடான ஒலிகளை எழுப்பும் இயல்புடையவை. பெரும்பாலும் நாயின் குரைப்பு போலவும் மனிதனின் குறட்டை போலவும் இருக்கும் இந்த குரல்களை வெகு தொலைவில் இருந்தும் கேட்க முடியும். இவை பிற கோலாக்களுடன் தொடர்பு கொள்வதற்கு இப்படி ஒலி எழுப்புகின்றன. ஏதாவது அச்சுறுத்தல் அல்லது உற்சாகமான செய்தியை வெளிப்படுத்த இந்த ஒலிகளைப் பயன்படுத்துகின்றன.

உணவுப் பழக்கம்: கோலாக்கள் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளை உண்ணுகின்றன. இவை மனிதர்களைப் போல உணவை மென்று சாப்பிடுவதில்லை. அவற்றிற்கு ஒரு சிறப்பான செரிமான அமைப்பு உள்ளது. அவை இலைகளில் காணப்படும் நச்சுக்களை உடைக்க பயன்படுகின்றன. அதனால் யூகலிப்டஸ் இலைகளின் நறுமணம் எப்போதும் இந்த கோலாக்களின் உடலில் இருந்து வீசும். இவை தங்களுடைய மார்பில் ஒரு தனித்துவமான வாசனை சுரப்பியை கொண்டுள்ளன. அது பிற கோலாக்களுடன் தொடர்புகொள்ள பயன்படுகின்றன.

கோமாளி நடை: கோலாக்கள் நடக்கும்போது பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும். கோமாளிகளை போன்று இவை நடக்கும்போது தடுமாறும். அவற்றின் முன் கால்கள் பக்கவாட்டில் தொங்கும். பின்னங்கால்களைப் பயன்படுத்தி நடக்கும். அதனால் பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.

நீச்சல் வீரர்கள்: இவை நடக்கும்போது பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் நீந்துவதில் வீரர்கள். முன்னங்கால்களால் துடுப்புப் போட்டு தண்ணீருக்குள் தங்களை செலுத்துவதற்கு பின்னங்கால்களை பயன்படுத்துகின்றன. அதனால் நன்றாகவும், வேகமாகவும் நீந்துகின்றன.

இதையும் படியுங்கள்:
நூற்றாண்டு கடந்தும் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் திருப்பதி குடையின் விசேஷம் தெரியுமா?
Koala bears

அடையாளம் காணுதல்: கோலாக்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பு உண்டு. மனிதர்கள் உட்பட பிற விலங்குகளின் தனிப்பட்ட முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறன் அவற்றுக்கு உண்டு. சில உயிரியல் பூங்காக்களில் தங்களை பார்வையிட வரும் பார்வையாளர்களை இவை அடையாளம் கண்டு கொள்கின்றன.

ஆயுட்காலம்: கோலாக்கள் காடுகளில் 15ல் இருந்து 15 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆனால், மரத்தில் வாழும் இவை, காடுகள் அழிக்கப்படுவதால், உறைவிடங்கள் இன்றியும், வேட்டையாடுபவர்களாலும் விரைவாக அழிந்து வருவது கவலைக்குரியது.

சுற்றுச்சூழலின் நண்பர்கள்: கோலாக்கள் சுற்றுச்சூழலின் சிறந்த நண்பர்கள். இவை விதைகளை காடு முழுவதும் சிதறடித்து யூகலிப்டஸ் காடுகளின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பராமரிக்க உதவுகின்றன. கோலாக்கள் இல்லை என்றால் இந்த யூகலிப்டஸ் காடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமானவை கோலக்கள். கோலா பொம்மைகள் அதிகளவு விற்பனை ஆவதே இதற்கு சாட்சி. மகிழ்ச்சியான இந்த கோலாக்கள் இனம் காப்பாற்றப்பட வேண்டும். இவை அழிந்து வரும் இனமாக மாறி வருகின்றன. மனிதர்கள் காடுகளை அழிப்பதால் கோலாக்களின் வாழ்விடங்கள் அழிந்து வருகின்றன. எனவே, கோலாக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com