மரத்தில் பூக்கும் தாமரை மலரைத் தெரியுமா?

magnolia grandiflora
மரத்தாமரைhttps://www.flowersofindia.net
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பொதுவாக, சேற்றில் வளரும் செந்தாமரையையோ, குளத்தில் வளரும் தாமரையையோ பார்த்திருப்போம். ஆனால், மரத்தில் வளரும் மரத் தாமரையைப் (magnolia grandiflora) பார்த்திருக்கிறோமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மரத்தில் பூக்கும் இந்த அரிய மரத்தாமரை பல மகத்துவங்களைக் கொண்டதாக கூறப்படுகிறது. உதகையை அடுத்துள்ள காந்தள் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இந்த அரிய வகை மரத்தாமரை மரம் காணப்படுகிறது. இந்த மரத்தடியில் ஏராளமான மகான்கள், சித்தர்கள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஊட்டி பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நறுமணமிக்க சம்பங்கி மலர்களுக்கு அருகிலேயே மரத்தாமரை மரத்தில் மொட்டுகள் தாமரையாகவே வளர்ந்து காட்சி தரும் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

பொதுவாக, இந்த மரங்களை அடர்ந்த காடுகளில் மட்டுமே காண முடியும். திண்டுக்கல் மாவட்டம், நகர மத்தியில் உள்ள நட்சத்திர ஏரிக்கு அருகில் உள்ள செட்டியார் பூங்காவிலும் இந்த மரம் காணப்படுகிறது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமே இதில் அழகிய பூக்கள் பூக்கும்.

நீலகிரியில் உள்ள சித்தர்களின் சமாதிக்கு அருகில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. சமாதிக்குப் பின்புறம் நன்கு வளர்ந்த நான்கு மரத்தாமரை மரங்கள் காணப்படுகின்றன. இம்மரங்களில் தாமரை போன்று அதிக உருவ ஒற்றுமை வாய்ந்த பூக்கள் பூக்கின்றன. தாமரைப் பூக்களை குளத்தில் பார்த்துப் பழகிய நமக்கு மரத்தில் பார்ப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

அமெரிக்காவின் தென்கிழக்கு பிரதேசங்களை பூர்வீகமாகக் கொண்ட மேக்னோலியா குடும்பத்தில் சுமார் 210 வகைகள் உள்ளன. செண்பக மரமும் இந்த குடும்பத்தை சேர்ந்ததுதான். செண்பகப் பூக்களைப் போலவே மேக்னோலியா பூக்களும் சிறந்த நறுமணத்தை கொண்டவை. இந்த மரங்களும் அதன் உறுதித் தன்மை காரணமாக மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகின்றது.

இதையும் படியுங்கள்:
Mom Brain எனும் அறிவாற்றல் மாற்றங்களை சரி செய்வது எப்படி?
magnolia grandiflora

மேக்னோலியா மரங்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழக்கூடியவை. இதன் இலைகள் மேற்புறம் அடர் பச்சையாகவும் அடிப்புறம் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

லத்தீன் வார்த்தையான கிராண்டிப்ளோரா (grandiflora) என்பதற்கு பெரிய பூ என்று பொருள். இந்தப் பூ பார்ப்பதற்கு வெள்ளைத் தாமரைப் பூக்கள் மரத்தில் பூத்திருப்பதைப் போலவே இருப்பதால் இதனை தமிழில் மரத்தாமரை என்றே அழைக்கிறார்கள். இவை மிசிசிபி மற்றும் லூசியான மாநிலங்களின் மாநில மலராகும்.

அடுத்த முறை ஊட்டிக்குச் செல்லும்பொழுது மறக்காமல் இந்த சிவன் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பதுடன் மரத்தாமரை மரத்தையும் கண்டு வாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com