சுற்றுச்சூழலின் பொறியியலாளராக செயல்படும் விலங்கு எது தெரியுமா?

Elephant
Elephant
Published on

சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவது யானைகள். இவை சுற்றுச்சூழலின் சமநிலையை பராமரிப்பதிலும் பல்லுயிர்ப் பெருக்கத்தை ஆதரிப்பதிலும், சுற்றுச்சூழலின் பொறியியலாளராகவும் விளங்குகின்றன. யானையின் சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

விதை பரவல்: யானைகள் தங்கள் உண்ணும் பழங்களிலிருந்து விதைகளை காடு முழுவதும் சிதறடிக்கின்றன. யானைகளால் விதைகளை 50 மைல் தூரம் வரை கொண்டு செல்ல முடியும். காடுகளின் பரந்த வெளிகளில் விதைகளைத் தூவி காடுகளின் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கின்றன. இந்த செயல்முறை வெப்பமண்டலக் காடுகளுக்கு மிகவும் முக்கியமானது. அங்கே பல இன மரங்கள் தோன்றுவதற்கு யானைகளே முக்கியக் காரணம்.

வன மீளுருவாக்கம்: இயல்பாகவே பெரிய உடல் அமைப்பை கொண்டவை யானைகள். இவை அடர்ந்த காடுகளின் வழியே செல்லும்போது வழியில் இருக்கும் செடிகள் மரங்கள் போன்றவற்றை மிதித்தும், தங்கள் துதிக்கையால் கிளைகள், மரங்களை முறித்தும் ஒரு தெளிவான பாதையை உருவாக்குகின்றன. இதனால் மற்ற உயிரினங்களுக்கு புதிய வாழ்விடங்களை உருவாக்க உதவுகின்றன. இந்த செயல்முறையால் சூரிய ஒளி, வனப்பகுதி முழுவதும் ஒளி வீச எதுவாக இருக்கிறது. இதனால் புதிய தாவரங்கள் மற்றும் மரங்கள் செழித்து வளர வழிவகை செய்கிறது.

சுற்றுச்சூழலின் பொறியியலாளர்கள்: யானைகளை சுற்றுச்சூழலின் பொறியியலாளர்கள் என்று சொல்வது மிகவும் பொருத்தமாகும். ஏனென்றால் இவை தரையில் குழி தோண்டுதல் துளையிடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழலை மாற்றி அமைக்கின்றன. இது நீர் பாயும் பாதைகளை உருவாக்குகிறது. மண்ணின் தரத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.

ஊட்டச்சத்து: யானைகளின் ஊட்டச்சத்து நிறைந்த சாணம் மற்றும் சிறுநீரை காடுகளின் வெவ்வேறு பகுதிகளில் வெளியேற்றுகின்றன. அதனால் காடுகள் முழுவதும் ஊட்டச்சத்துக்கள் விநியோகிக்க ஏதுவாக உள்ளன. இது பிற தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சியை ஆதரிக்கும் விதத்தில் இருக்கிறது.

சுற்றுச்சூழல் சமநிலை: யானைகள் சைவ உண்ணிகள். இவற்றின் ஆகாரத்தின் முக்கிய ஆதாரமாக இருப்பது மரங்கள் மற்றும் செடி கொடிகள்தான். இவற்றை யானைகள் நாடுவதால் தாவர உண்ணிகளான எருமைகள் மற்றும் பிற தாவரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவுகின்றன. அதிகப்படியான மேய்ச்சலை தடுக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிக்கிறது.

மண் காற்றோட்டம்: யானைகள் தரையில் குழி தோண்டுவதால் மண்ணை காற்றோட்டமாக வைக்க உதவுகின்றன. இது மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் வேர்களை ஆழமாக வளர அனுமதிக்கிறது. இதனால் ஆரோக்கியமான தாவர வளர்ச்சி உண்டாகிறது.

கார்பன் வரிசைப்படுத்துதல்: யானைகள் வசிக்கும் காடுகளில் கார்பன் வரிசைப்படுத்துதல் முறையாக நடக்கின்றது. இது வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை தணிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன தெரியுமா?
Elephant

பல்லுயிர் பராமரிப்பு: யானைகள் பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கின்றன. அவை பல்வேறு வகையான வாழ்விடங்களை உருவாக்குகின்றன. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிப்பதற்கும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குவதற்கும் இந்த பல்லுயிர்கள் அவசியம். அதற்கு முக்கிய காரணியாக யானைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சூழலியல் இணைப்பு: யானைகள் காடுகளில் நெடுந்தொலைவுகளுக்கு பயணம் செய்வதன் மூலம் சூழலியல் இணைப்பைப் பராமரிக்க உதவுகின்றன. இது வெவ்வேறு விலங்கு கூட்டங்களுக்கிடையே மரபணுக்கள் பாய அனுமதிக்கிறது மற்றும் மரபணு வேறுபாட்டை பராமரிக்கிறது.

எனவே, யானைகள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கிய அங்கம் என்பதில் சந்தேகம் இல்லை. சுற்றுச்சூழல் பொறியியலாளர்களான யானைகள் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றின் இழப்பு சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்கு குறிப்பிடத்தகுந்த விளைவுகளை ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com