இந்தியாவில் சுத்தமான காற்று வீசும் 10 நகரங்கள் எவை தெரியுமா?

மடிகேரி
மடிகேரி
Published on

த்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவில் காற்றின் தரம் மாசடையாமல் பேணப்படும் முதல் பத்து நகரங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 50க்குள் காற்றின் தரக் குறியீடு இருப்பது நல்ல நிலையாக கருதப்படுகிறது. அப்படி காற்றின் தரம் சிறப்பாக அமையப்பெற்ற நகரங்கள் கர்நாடக மாநிலத்தில் நிறைய உள்ளன. காற்று தரக் குறியீட்டில் முதல் பத்து இடங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலைக் காண்போம்.

தாவண கெரே: கர்நாடக மாநிலம், தாவண கெரே நகரம் 27 என்ற காற்றின் தரக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

பாகல் கோட்: கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டில் 46 குறியீட்டு மதிப்புடன் காற்றின் தரம் காணப்படுகிறது.

திண்டுக்கல்: காற்றின் தரம் சிறப்பாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் திண்டுக்கல்லும் இடம்பெற்றுள்ளது. கொடைக்கானல் போன்ற இயற்கை வாசஸ்தலம் சூழ்ந்த பகுதிகளை உள்ளடக்கி இருக்கும் இப்பகுதியின் காற்றின் தர குறியீடு 46 என்ற அளவில் உள்ளது.

அனந்தபூர்: ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் 47 என்ற காற்றின் தரக் குறியீட்டை கொண்டு மாசுபாடு குறைவான காற்றை சுவாசிக்கும் நகரமாக விளங்குகிறது.

பெல்காம்: கர்நாடக மாநிலம், பெல்காம் நகரம் காற்றின் தரத்தை சிறப்பாகப் பேணப்படும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நகரத்தின் காற்றின் தரக் குறியீடு  48 என்ற அளவில் உள்ளது.

பிலாய்: சத்தீஸ்கர் மாநிலம், பிலாய் நகரம் 42 என்ற குறியீட்டு மதிப்புடன் காற்றின் தரத்தை சிறப்பாக பராமரித்து வருகிறது.

சாம்ராஜ் நகர்: கர்நாடகாவின் தெற்கு பகுதியில் உள்ள சாம்ராஜ் நகர் நல்ல காற்றின் தரத்தைக் கொண்டிருக்கிறது. அங்கு காற்றின் தரக் குறியீடு 41.

ஹாவேரி: இதுவும் கர்நாடகாவில் உள்ள நகரம்தான். தற்போது 40 குறியீட்டு மதிப்புடன் நல்ல காற்றின் தரத்தை அந்நகரம் கொண்டுள்ளது.

கலபுர்கி: கர்நாடக மாநிலத்தின் மற்றொரு நகரமான கலபுர்கி 45 குறியீட்டு மதிப்புடன் நல்ல அளவிலான காற்றை சுவாசிக்கும் தரத்தைக்  கொண்டுள்ளது.

மடிகேரி: கர்நாடகாவில் உள்ள மடிகேரி சுத்தமான காற்றின் தரத்தைக் கொண்டிருக்கும் முதன்மையான நகரமாக விளங்குகிறது. அங்கு காற்றின் தரக்குறியீடு 25 என்ற அளவில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com